"இனி எவனும் பலாத்காரம் பண்ண கூடாது" சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு, கிராம மக்கள் கொடுத்த பதிலடி..
தெலுங்கானா மாநிலம், அடிலாபாத் மாவட்டம் குடிஹத்னூர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் வசித்து வரும் அதே பகுதியில் வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அந்த சிறுமியிடம் பாசமாக பேசி, அவரை கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து, சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து அந்த கிராமம் முழுவதும் பரவியுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், அந்த வாலிபருக்கு பாடம் புகட்ட முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, அந்த கிராமமக்கள் ஒன்றாக திரண்டு, பலாத்காரம் செய்த வாலிபரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த அந்த வாலிபர், வீட்டிற்க்குள் சென்று கதவை பூட்டியுள்ளார். சிறுமியின் உறவினர்கள் வாலிபரை வெளியே வருமாறு கத்தி கூச்சலிட்டும், அவர் கதவை திறக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், வாலிபர் உள்ளே இருக்கும் போதே வீட்டுக்கு தீ வைத்தனர். இதனால், வீடு முழுவதும் தீ பரவியது. இதில் வீட்டிற்க்குள் இருந்த வாலிபர், படுகாயமடைந்து மயங்கி விழுந்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியின் உறவினர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் ஆத்திரம் அடங்காத கிராம மக்களும், சிறுமியின் உறவினர்களும் வாலிபர் வீடு மீது கற்களை வீச தொடங்கினர். பின்னர் போலீசார் மயங்கி கிடந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதனால், கிராமமக்கள் போலீசார் மீதும் தாக்குதல் நடத்தினர். இதனால் 5 பேர் படுகாயம் அடைந்ததை அடுத்து, கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு கிராம மக்களை கட்டுப்படுத்தினர். மேலும், தாக்குதல் நடத்திய கிராம மக்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Read more: “பூஜை செய்ய வந்த இடத்தில், பூசாரி செய்த வேலை”; வெளுத்து வாங்கிய பக்தர்கள்..