முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"உனக்கு என்ன விட, பாய் பெஸ்டி முக்கியமா?" கட்டில் அடியில் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..

man killed his wife who often spoke with her boy bestie
07:22 PM Jan 08, 2025 IST | Saranya
Advertisement

டெல்லி ஜானக்புரியைச் சேர்ந்தவர் தன்ராஜ். வேலைக்கு செல்லாமல் மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ்ந்து வரும் இவர், குடி பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இவரது 26 வயது மனைவி, தீபிகா ஸ்பா ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், வேலைக்கு செல்லும் தனது மனைவியின் மீது தன்ராஜுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது ஆண் நண்பருடனான தொடர்பை கைவிடும்படி தன்ராஜ் கூறியுள்ளார். ஆனால், தீபிகா தனது ஆண் நண்பருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

Advertisement

இந்நிலையில், தீபிகாவின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது மட்டும் இல்லாமல், அவரது வாடகை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டுக் கதவை உடைத்து பார்த்த போது, கட்டில் அடியில் இருந்த பாக்ஸில் தீபிகாவின் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. மேலும், அவரது வாயில் வெள்ளை டேப் ஒட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து, போலீசார் தலைமறைவாக இருந்த தீபிகாவின் கணவரை கைது செய்தனர். இது குறித்து போலீஸ் துணை கமிஷனர் அங்கிட் கூறுகையில், ''தன்ராஜ் மொபைல் ஆஃப் செய்யப்பட்டு இருந்த நிலையில், அவர் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தியதின் அடிப்படையில் அவர் தங்கி இருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். தீபிகாவைக் கொலை செய்த தன்ராஜ், தீபிகாவின் உடலை பல துண்டுகளாக வெட்டி டப்பாவில் போட்டு வைத்துள்ளார்.

தீபிகாவின் உடலை டிஸ்போஸ் செய்ய தன்ராஜ் தனது நண்பரிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால் அவரது நண்பர் அதற்க்கு மறுத்துவிட்டார். கொலை செய்யவும், உடலை துண்டு துண்டாக வெட்டவும் தன்ராஜ் ஏராளமான வீடியோக்களை பார்த்துள்ளார். கொலை செய்து விட்டு, ஆக்ரா, டெல்லி சென்றுள்ளார். பின்னர், தனது மனைவியின் நண்பரையும் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், அவர் கத்தியுடன் அமிர்தசரஸில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்." என்றார்.

Read more: “எனக்கே ஒன்னும் இல்லைங்க” திருடனிடம் புலம்பிய பெண்; பதிலுக்கு திருடன் என்ன கொடுத்தான் தெரியுமா?

Tags :
boy bestiehusbandmurder
Advertisement
Next Article