"என் பொண்டாட்டி கையை தடவுனியா?"; நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு.. இறுதியில் நடந்த சோகம்..
வேலூர் கஸ்பாவை சேர்ந்தவர் 29 வயதான ஜமீர், பெயிண்டராக வேலை செய்து வருகிறார். தொரப்பாடியைச் சேர்ந்த 27 வயதான ஜூபேர், பேக்கரியில் வேலை செய்து வருகிறார். இருவரும் நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில், ஜமீருக்கும் கரிமா என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. நண்பர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கடி மது அருந்துவது வழக்கம். இந்நிலையில் ஜமீர் வீட்டில் இல்லாத போது, ஜூபேர் அவரது வீட்டிற்கு சென்று, அவரது மனைவியிடம் தண்ணீர் வாங்கிக் குடிப்பது வழக்கம்.
இதையடுத்து, அவரது மனைவி ஜூபேர் தன்னை தவறான எண்ணத்தில் பார்ப்பதாகவும், தண்ணீர் கொடுக்கும் போது தனது கையை தடவுவதாகவும், அவரது கணவரிடம் கூறியுள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம் போல் ஜமீரும், ஜூபேரும் வேலூர் கோட்டை பெரியார் பூங்காவுக்கு மது அருந்த சென்றுள்ளனர். அப்போது தனது மனைவியை தவறான எண்ணத்தில் பார்ப்பது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ஜமீர், ஜூபேரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார்.
பின்னர் அவரது உடலை, கோட்டை அகழியில் வீசிச் சென்றுள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார், ஜமீரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனையும், ₹10 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளார்.
Read more: “உனக்கு எப்படி டி குழந்தை பிறந்துச்சு?” ஷாக் ஆன பள்ளி மாணவியின் தாய்.. மாணவி கூறிய அதிர்ச்சி தகவல்..