For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மகள்களுடன் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்ட தந்தை!!! தாயை இழந்த பிள்ளைகளுக்கு நேர்ந்த சோகம்..

father sexually harassed his daughters
06:28 PM Dec 20, 2024 IST | Saranya
மகள்களுடன் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்ட தந்தை    தாயை இழந்த பிள்ளைகளுக்கு நேர்ந்த சோகம்
Advertisement

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே மேல்பட்டாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது 17 வயதான மூத்த மகள், அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவரது 15 வயதான இரண்டாவது மகள் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், தனது இரண்டு மகள்களையும் இவர் பராமரித்து வந்துள்ளார்.

Advertisement

இந்நிலையில், சம்பவத்தன்று இவரின் இரண்டு மகள்களும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது வீட்டுக்கு வந்த தந்தைக்கு, தனது மகள்களுடன் உல்லாசமாக இருக்க ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனது மூத்த மகளுக்கு, வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், பள்ளியில் படித்து வரும் தனது இரண்டாவது மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த இரு மகள்களும், தங்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து கடலூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், இரு பெண்களின், தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவரை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை நீதிபதி லட்சுமி ரமேஷ் விசாரித்தார். விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் தனது இரண்டு மகள்களுக்கும் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இதையடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

Read more: மூட்டுவலி, கால்வலி எல்லாம் காணாமல் போகும்.. இந்த ஊத்தாப்பம் சாப்பிட்டு பாருங்க..!

Tags :
Advertisement