"எங்கடா இங்க இருந்த ரூம காணோம்.." OYO வில் ஹோட்டல் அறையை புக் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! பரபரப்பு குற்றச்சாட்டு.!
பெங்களூர் நகரில் ஆன்லைன் மூலமாக ஹோட்டல் புக் செய்தவருக்கு ஏற்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தனது அனுபவத்தை சமூக வலைதளத்தில் அந்த நபர் பதிவு செய்திருக்கிறார். அமித் சன்சிகர் என்ற நபர் பெங்களூர் நகரில் தங்குவதற்காக மேக் மை ட்ரிப் இணையதளம் மூலம் 'OYO' ஹோட்டல் அறையை புக் செய்து இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அந்த நபர் ஹோட்டலை அடைந்தபோது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. அவர் புக் செய்த ஹோட்டலில் கட்டிட வேலைகள் நடைபெற்றிருக்கிறது. இது தொடர்பாக ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது அந்த நபரிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து சமூக வலைதளத்தில் புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக தனது கருத்தை பதிவு செய்திருக்கும் அவர் மேக் மை ட்ரிப் மூலமாக 'OYO' ஹோட்டலில் அறையை புக் செய்தேன். நான் அந்த ஹோட்டலை அடைந்தபோது அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். மேலும் என்னுடைய பணத்தை முழுமையாக திருப்பிக் கொடுக்கவில்லை. அதில் ஒரு பகுதியை எடுத்துவிட்டு மீதியை தான் கொடுத்தார்கள்.
மேலும் தனக்கு நடக்கப்பட்ட அநீதி குறித்து பதிவு செய்திருந்த அவர் மேக் மை ட்ரிப் மற்றும் OYO ஹோட்டல் மோசடி செய்கிறது. கட்டுமானம் நடைபெற்று வரும் ஹோட்டலில் எனக்கு அறையை புக் செய்து என்னுடைய இரண்டு மணி நேரத்தை வீணடித்ததோடு எனக்கு தரவேண்டிய தொகையிலும் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டனர். இதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும் என கோபத்துடன் பதிவு செய்து இருக்கிறார். ஆன்லைன் பதிவுகளில் நடைபெறும் இது போன்ற சம்பவங்கள் பொது மக்களை விழிப்புடன் இருப்பதற்கு தூண்டுகிறது.