For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பாரிஸில் உள்ள ஈரான் தூதரகத்தில் வெடிகுண்டு மிரட்டல்.. ஒருவர் கைது!

08:30 PM Apr 19, 2024 IST | Mari Thangam
பாரிஸில் உள்ள ஈரான் தூதரகத்தில் வெடிகுண்டு மிரட்டல்   ஒருவர் கைது
Advertisement

பிரான்சில் உள்ள ஈரான் துணை தூதரகத்தில், வெடிகுண்டு பெல்ட் அணிந்து வெடிக்க செய்வதாக மிரட்டிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பாரீசில் உள்ள ஈரான் தூதரகத்தில் வெடி குண்டு ஜாக்கெட்டுடன் ஒருவர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து ஏராளமான ஆயுதம் ஏந்திய போலீசார் அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். ஈரான் தூதரகத்தில் போலீசார் நடத்திய சோதனைக்கு பிறகு அந்த நபரை கைது செய்தனர்.

இதுகுறித்து பிரான்ஸ் போலீசார் கூறியதாவது, "வெடிகுண்டு பெல்ட் அணிந்த அந்த நபர் 11 மணி அளவில் தூதரகம் உள்ளே சென்றுள்ளார். அவரை சோதனை செய்த பிறகு அவர் வைத்திருந்த வெடிகுண்டுகள் டம்மி என தெரிய வந்தது" என்றனர். அவரை கைது செய்த போலீசார் அவர் எதற்காக தூதரகம் உள்ளே சென்றார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாரீஸ் நகரில், ஈரான் நாட்டு தூதரகம் இருந்தாலும். அந்த இடம் ஈரான் நாட்டின் சொந்த இடமாகவே கருதப்படும். பிரான்ஸ் போலீஸ் உட்பட எந்த ஒரு அதிகாரியோ, அன் நாட்டு அனுமதி இன்றி உள்ளே நுளைய முடியாது. இஸ்ரேல் ஈரான் இடையே போர் நடைபெறும் இந்நிலையில் பாரீசில் உள்ள ஈரான் தூதரகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement