For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அட்சய திருதியை: தங்கம் வாங்க நல்ல நேரம் எது? தங்கத்திற்கு பதில் வேறு பொருள் வாங்கினால் நன்மை கிடைக்குமா?

05:25 AM May 10, 2024 IST | Baskar
அட்சய திருதியை  தங்கம் வாங்க நல்ல நேரம் எது  தங்கத்திற்கு பதில் வேறு பொருள் வாங்கினால் நன்மை கிடைக்குமா
Advertisement

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திதியே அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் பொருள் வளரும் என்பது ஐதீகம்.

Advertisement

இன்று அட்சய திருதியை என்பதால் ஏராளமான மக்கள் தங்கம் வாங்க நகைக் கடைகளில் குவிவார்கள். அட்சய திருதியை நாளில் தங்கம் உள்ளிட்ட பொருட்களை வாங்கினால் அந்த பொருள் இரட்டிப்பாகும் என்பது ஐதீகம். இருக்கப்பட்டவர்கள் தங்கம் வாங்குவர்கள். ஒரே வேளை தங்கம் வாங்க முடியாதவர்கள் இந்த நாளில் வேறு என்னென்ன வாங்கினால் நன்மை கிடைக்கும் என்பதை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திதியே அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் பொருள் வளரும் என்பது ஐதீகம். இந்த நாளில் தங்கம் வாங்கினால் செழிப்பும், நன்மையும் கிடைக்கும் என்பார்கள். ஆனால், தற்போது தங்கம் விலை தாறுமாறாக ஏறியுள்ளது. இதனால், எல்லோராலும் தங்கம் வாங்க முடியாத நிலை உள்ளது.இந்த நாளில் தங்கம் வாங்கினால் மட்டும்தான் நன்மை என்பது இல்லை. அதற்கு பதிலாக உப்பு, அரிசி, ஆடைகள், சிறிய பாத்திரம் உள்ளிட்டவற்றையும் வாங்கலாம்.

மேலும் இந்த அட்சய திருதியை நாளில் பெண் பார்க்க செல்வது, நிச்சயதார்த்தம் போன்ற சுபகாரியங்களை செய்வது நல்லது. அட்சய திருதியை அன்று தானம் கொடுப்பதும் நல்லது. மேலும் ஆடை எனப்படும் வஸ்திரத்தை தானமாக கொடுக்கலாம். மேலும் அன்னதானம் கொடுப்பதும் சிறப்புதான்.

தங்கம் வாங்க நல்ல நேரம் எது? இன்று அதிகாலை 4.17 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.50 மணி வரை தொடர்கிறது. அட்சய திருதியை நாளில் சுப முகூர்த்தம் காலை 5.33 முதல் 7.14 வரை இருக்கும். அமிர்த முகூர்த்தம் காலை 8:56 முதல் 10:37 வரையும் மதியம் 12.18 மணி முதல் 1.59 மணி வரையும் சுபமுகூர்த்தம் உள்ளன. அதேபோல், மாலை 5.21 மணி முதல் இரவு 7.02 மணி வரை சிறிய முகூர்த்தங்கள் உள்ளன. இந்த நேரங்களில் தங்கம் உள்ளிட்ட பொருட்களை வாங்கலாம். மேலும் வெயில் காலம் என்பதால் அதையும் கவனத்தில் கொண்டு தங்கம் வாங்க செல்லுங்கள்.

Read More: கீல்வாதம் நோயை 8 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கும் AI தொழில்நுட்பம்.!! மருத்துவத்துறையில் புதிய சாதனை.!!

Tags :
Advertisement