"ஆணின் குரோமோசோம்கள் தான் குழந்தையின் பாலின.."! வரதட்சனை கொடுமை வழக்கில் நீதிபதி அறிவுரை.!
டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் பிறந்திருக்கிறது. மேலும் அந்த பெண்ணின் பெற்றோர் குறைவான வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைத்ததால் கணவரின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணை கொடுமை செய்து வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தங்களது மகளின் தற்கொலைக்கு நியாயம் வேண்டி அவரது பெற்றோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ன காந்த சர்மா முன்னிலையில் இந்த வழக்கிற்கான விசாரணை நடைபெற்றது. அப்போது வாதங்கள் மற்றும் பிரதிவாதங்கள் ஆகியவற்றை கேட்டறிந்தார் நீதிபதி.
வழக்கு விசாரணையின் போது பேசிய அவர் " திருமணம் ஆன பெண்களுக்கு நடைபெறும் வரதட்சனை கொடுமைகளைக் கேட்கும் போது மனதிற்கு மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது. பெற்றோர் வீட்டில் இருந்து வரும் பெண்ணை உங்க வீட்டில் அன்போடும் அரவணை போடும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் இங்கு வரதட்சணை என்கிற பெயரில் கொடுமை செய்து வருகிறார்கள்.
மேலும் பெண்ணிடம் உள்ள இரண்டு 'எக்ஸ்' குரோமோசோம்கள் ஆணிடம் உள்ள 'எக்ஸ்', 'ஒய்' குரோமோசோம்களுடன் வினைபுரிந்து குழந்தை உருவாகிறது. கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை ஆண்களின் குரோமோசமான 'எக்ஸ்' மற்றும் 'ஓய்' தான் முடிவு செய்கிறது. இதனைப் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கருவின் பாலினத்தை முடிவு செய்வது ஆண்களின் குரோமோசோம் தான். இந்த அறிவியலை அனைவருக்கும் கற்றுக் கொடுங்கள் என நீதிபதி தெரிவித்திருக்கிறார்.