முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சந்திரமுகி பட நடிகர் மோகன்ராஜ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!!

Malayalam Actor Mohanraj Aka Keerikkadan Jose Passes Away
08:06 PM Oct 03, 2024 IST | Mari Thangam
Advertisement

தமிழில், ஆண்களை நம்பாதே, கழுகுமலை கள்ளன், தர்மதுரை, தங்கபாப்பா, கர்ணா, ஏழுமலை, சந்திரமுகி, ஆதிபகவன் உட்பட பல படங்களில் வில்லனாக நடித்திருப்பவர் மலையாள நடிகர் மோகன் ராஜ். கீரிக்காடன் ஜோஸ் என்றும் அழைக்கப்படும் இவர், மலையாளம் தவிர தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் 80 மற்றும் 90 களில் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

Advertisement

மலையாள சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்துள்ளார். மோகன்லால் நடித்த மூன்றாம் முறை படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார் மோகன்ராஜ் மலையாளம், தமிழ், தெலுங்கு என மொத்தம் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர்க்கு 66 வயதான நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு உஷா என்ற மனைவியும், ஜெய்ஷ்மா, காவியா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். அவரின் மறைவிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read more ; 2024-25 நிதியாண்டில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 5.85% அதிகரிப்பு…!

Tags :
Malayalam actorMalayalam Actor Mohanrajpasses away
Advertisement
Next Article