சமந்தா விவகாரத்து வதந்தி.. தெலுங்கானா அமைச்சர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த நாகார்ஜுனா..!!
நாக சைதன்யா – சமந்தா விவாகரத்துக்கு தெலங்கானாவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகன் கேடிஆர் தான் காரணம் என தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா தெரிவித்தார். அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருந்து ஆந்திர திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்களுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சரின் இந்தக் கருத்துக்கு நடிகரும், சமந்தாவின் முன்னாள் மாமனாருமான நாகார்ஜூனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேவேளையில், தன் மீது அவதூறு கருத்து பரப்பும் விதமாக, அமைச்சர் சுரேகா கருத்து தெரிவித்திருப்பதாகவும், அதனை உடனே திரும்பப் பெறவில்லை என்றால், சட்டப்படி வழக்கு தொடர்வேன் என்று முன்னாள் அமைச்சர் கே.டி. ராமராவும் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா அக்கினேனி, தெலுங்கானா காங்கிரஸ் அமைச்சர் கொண்டா சுரேகா மீது கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கு ஒன்றை நம்பள்ளி நீதிமன்றத்தில் தொடர்ந்தார். அந்த புகாரின் நகலை சைதன்யா தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகாரில், அக்கினேனி குடும்பத்தின் பொது நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்துடன் அமைச்சர் சுரேகா பேசியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.