ஜெயிலுக்குள் ஐஸ்கிரீம், பானிபூரியா.! அடடே சூப்பரான ஆஃபர்.! வாங்க எங்கன்னு தெரிஞ்சுக்கலாம்.!
குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு நீதிமன்றங்களின் மூலம் தண்டனை வழங்கப்பட்டு அவர்கள் சிறைச்சாலைகளில் அடைக்கப்படுவார்கள். தண்டனை காலம் முடியும் வரை அவர்களுக்கு சிறை தான் உலகம். இத்தகைய சிறைச்சாலைகளை தண்டனைக்குரிய இடமாக பார்க்காமல் அவர்களை சீர்திருத்தும் இடமாக பார்க்க வேண்டும் என்று தான் நீதிமன்றங்களும் சட்டங்களும் சொல்கிறது.
ஒருவர் செய்த குற்றத்திற்கு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டாலும் அதன் மூலம் அவர் சிறைச்சாலையில் அடைக்கப்படும் போது அவரது வாழ்வை மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பாகவே அந்த தண்டனை காலம் பார்க்கப்படுகிறது. இத்தகைய சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் அரசு செய்து கொடுத்து வருகிறது. தற்போது மகாராஷ்டிரா மாநில சிறைச்சாலையில் அந்த அரசு கொண்டு வந்திருக்கும் புதிய நடவடிக்கைகள் பலராலும் பாராட்டப்படுகிறது.
மகாராஷ்டிரம் மாநிலத்தில் இருக்கும் சிறைச்சாலைகளில் அத்தியாவசிய பொருட்களின் பட்டியலுடன் ஐஸ்கிரீம் மற்றும் பானிபூரி ஆகியவை இணைக்கபட்டிருப்பது கைதிகளுக்கு மத்தியில் மிகப்பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சிறைக்குள் இருக்கும் அங்காடியில் அடிப்படை பொருள்களின் பட்டியலில் டி ஷர்ட், ஃபேஸ் வாஷ் மற்றும் ஹேர் டை போன்ற அத்தியாவசிய பொருட்கள் இணைக்கப்பட்டு இருப்பதோடு பானி பூரி, ஐஸ்கிரீம் போன்றவையும் சேர்க்கப்பட்டுள்ளது. சிறையில் இருக்கக்கூடிய கைதிகளின் மனநிலையில் மாற்றங்களை கொண்டு வருவதற்காக இது போன்ற புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை இடியை தெரிவித்திருக்கிறார்.