For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிரடி கைது.. மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் சிக்கிய பிரபல நடிகர்!

11:59 AM Apr 28, 2024 IST | Mari Thangam
அதிரடி கைது   மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் சிக்கிய பிரபல நடிகர்
Advertisement

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் நடிகர் சாஹில் கான் சத்தீஸ்கரில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பால் ஆகிய இருவரும் இணைந்து, ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை நடத்தி வந்தனர். இந்தச் செயலி மூலம் தினமும் ரூ.200 கோடி லாபம் ஈட்டிய அவர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளுக்கு பெரும் தொகையை லஞ்சமாக வழங்கி வந்துள்ளனர்.

இது தொடர்பாகவும் அமலாக்கத் துறை ஏற்கெனவே பலரை கைது செய்துள்ளது. செயலியின் உரிமையாளர்கள் ரவி உப்பால் மற்றும் சவுரப் சந்திரகர் இருவரும் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சஹில் கான் 'தி லயன் புக் ஆப்' என்ற பந்தய செயலி வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

இது மகாதேவ் பந்தய செயலி நெட்வொர்க்கின் ஒரு பகுதியாகும். இந்த வழக்கில் மும்பை காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) முன்னதாக அவரிடம் விசாரணை நடத்தியது. மேலும், சாஹில் கான் 'தி லோட்டஸ் புக் ஆப்' இல் பங்குதாரராக உள்ளார். அந்த செயலியின் விளம்பரங்களிலும் அவர் நடித்துள்ளார். அவர், 'லோட்டஸ் புக் 24/7' செயலியின் பங்குதாரராகவும் உள்ளார்.

மும்பை உயர் நீதிமன்றம் நடிகர் சஹில் கானின் இடைக்கால ஜாமீன் மனுவை நிராகரித்ததை அடுத்து, மும்பை போலீஸ் சைபர் செல் சிறப்பு புலனாய்வுக் குழுவால் (SIT) சாஹில் கான் சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டார். சத்தீஸ்கரில் உள்ள ஜக்தல்பூரில் பிடிபட்ட அவர் மீண்டும் மும்பைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சஹில் கானின் ஜாமீன் மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அவர் தப்பி ஓடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சத்தீஸ்கர் காவல்துறையினரின் உதவியுடன் 40 மணி நேரத்திற்கும் மேலாக தேடியப் பிறகு சஹில் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags :
Advertisement