For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பிரம்மாண்டம்..!! சொந்தமாக தொழில் தொடங்கிய நடிகை சினேகா..!! என்ன பிசினஸ் தெரியுமா..?

11:00 AM Feb 09, 2024 IST | 1newsnationuser6
பிரம்மாண்டம்     சொந்தமாக தொழில் தொடங்கிய நடிகை சினேகா     என்ன பிசினஸ் தெரியுமா
Advertisement

நடிகை சினேகா தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சினேகா. பல ரசிகர்களுக்கும் இன்றும் இவர் கனவுக்கன்னியாக இருக்கிறார். புன்னகை அரசி என்ற செல்ல பெயருடன் அழைக்கப்படும் இவர், தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் "GOAT" படத்தில் நடித்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில், சினிமா பிரபலங்கள் பலரும் சினிமா தாண்டியும் வேறு துறைகளிலும் பிசினஸ் செய்து வருகின்றனர்.

அதுபோல், நடிகை நயன்தாரா அழகு மற்றும் ணவு போன்ற பிசினஸ், சமந்தா துணி பிசினஸ், காஜல் நகை பிசினஸ், கத்ரீனா பியூட்டி பிசினஸ் செய்து கொண்டிருகிறார். அப்படித்தான் நடிகை சினேகாவும் தற்போது புது பிசினஸ் ஒன்றில் இறங்கியுள்ளார். நடிகை சிநேகா "சிநேஹாலயா சில்க்ஸ்" என புடவை பிசினஸை தொடங்கியுள்ளார். இதற்கான திறப்பு விழா வருகிற 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்காக பத்திரிகை கொடுத்து தனக்கு நெருக்கமான திரையுலக பிரபலங்களையும், நண்பர்களையும் அழைத்துள்ளார் சிநேகா. நடிகை சிநேகாவின் புதிய பிசினஸிற்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement