For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BJP | 'திருச்சியில் ஜே.பி நட்டா வாகன பேரணிக்கு அனுமதி'… மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு.!!

03:37 PM Apr 07, 2024 IST | Mohisha
bjp    திருச்சியில் ஜே பி நட்டா வாகன பேரணிக்கு அனுமதி … மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு
Advertisement

BJP: திருச்சி நகரில் பாஜக தலைவர் ஜே.பி நட்டா கலந்து கொள்ளும் வாகன பேரணிக்கு மாற்றுப் பாதையில் அனுமதி வழங்குமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

Advertisement

2024 ஆம் வருடத்திற்கான பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது.

கடந்த தேர்தல்களில் பாஜக(BJP) உடன் பயணித்த அதிமுக இந்த முறை தனியாக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதனால் பாரதிய ஜனதா கட்சி தனது தலைமையில் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் ஆதிக்கத்தை தமிழ்நாட்டில் நிலைநாட்டுவதற்காக அந்த கட்சியின் தலைமை தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே பிரதமர் மோடி தமிழகத்தில் பலமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்று உரையாற்றினார்.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக அந்த கட்சியின் தேசியத் தலைவர் நட்டா தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இவர் பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்ட பின் திருச்சி ரோட் ஷோவில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்தார். இந்த நிகழ்ச்சி திருச்சியின் புகழ் பெற்ற மலைக்கோட்டையில் இருந்து காந்தி மார்க்கெட் வரை நடைபெறுவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு காரணங்கள் கருதி அனுமதி தரா காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து மாற்றுப் பாதையில் ரோடு ஷோ நடத்துவதற்கு அனுமதி கேட்டு பாஜக சார்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அவசரம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜேபி நட்டா கலந்து கொள்ளும் பேரணி திருச்சி கண்ணப்பா ஹோட்டலில் இருந்து இஎஸ்ஐ மருத்துவமனை வரை மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடத்துவதற்கு அனுமதி வழங்குமாறு மதுரை உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

Read More: IPL 2024 | சென்னை, ஹைதராபாத் போட்டிகளில் மோசடி.!! சைபர் க்ரைம் காவல்துறை விசாரணை.!!

Advertisement