முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

10ஆம் வகுப்பு பாஸ் போதும்.. மதுரை நியாய விலைக்கடைகளில் வேலைகள் வெயிட்டிங்..!! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..

Madurai District Fair Price Shops has published a notification for the recruitment of salespersons and builders.
02:06 PM Oct 17, 2024 IST | Mari Thangam
Advertisement

மதுரை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) ஆகிய 106 காலி பணியிட பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கானஅறிவிப்பு வெளியாகி உள்ளது.

Advertisement

இதற்கான கல்வி தகுதிகள்: விற்பனையாளருக்கான கல்வி தகுதி பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான கல்வி தகுதிகள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டுநர்களுக்கான கல்வி தகுதி கட்டாயமாக பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

மொழித்திறன் : விண்ணப்பதாரர்கள் அனைவரும் தமிழ் மொழியில் பேசவும், எழுதப்படிக்க போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு : பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இவ்வகுப்பைச் சார்ந்த முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், அனைத்து இனத்தைச் சார்ந்த விதவைப் பெண்கள் ஆகியோருக்கு வயது வரம்பு இல்லை. இதர வகுப்பினர் அதாவது OC வகுப்பைச் சார்ந்தவர்கள் 32 வயது உடையவராகவும் , OC வகுப்பைச் சார்ந்த முன்னாள் ராணுவ வீரர் 50 வயது உடையவராகவும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 40 வயது உடையவராகவும் இருக்க வேண்டும்.

சம்பள விவரம் : விற்பனையாராக தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 8600 - 29000 ரூபாய் ஊதியமாகவும், கட்டுநர்களாக தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 7800 - 26000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவருமே நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளமான https://drbmadurai.net/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் ஆன்லைன் மூலமாக மட்டுமே வருகின்ற 7. 11 .2024 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நேரிலும் அல்லது தபால் மூலமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள படாது என்றும் இதற்கு விண்ணப்ப கட்டணமாக விற்பனையாளர் பணியிடத்திற்கு 150 ரூபாயும், கட்டுநர் பணியிடத்திற்கு 100 ரூபாயும் வசூலிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Read more ; இறந்து 11 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் உயிர் பெற்ற பெண்..!! மரணத்திற்கு பிறகு என்ன நடந்துச்சு?

Tags :
madurai districtration shoptn government
Advertisement
Next Article