முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மத்திய பிரதேசம்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!! 7 பேர் பலி.! 30 பேர் கவலைக்கிடம்.! முதல்வர் அவசர ஆலோசனை.!

02:51 PM Feb 06, 2024 IST | 1newsnationuser4
Advertisement

மத்திய பிரதேச மாநில பட்டாசு ஆலையில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடி விபத்து நாட்டையே அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலம் ஹர்தர் நகரில் மிகப்பெரிய பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. சற்று முன் அந்த ஆலையில் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisement

இந்த விபத்தில் 7 பேர் மரணம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த பயங்கர விபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது. காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களுக்கு அவசர நிலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் 30க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த வெடி விபத்து குறித்து மத்திய பிரதேசம் மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் அரசு அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

Tags :
100 injured7 people diedCracker factoryExplosionmadhya pradesh
Advertisement
Next Article