For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வசூல் வேட்டையில் பட்டையை கிளப்பும் ’மதகஜராஜா’..!! தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா..?

The website Sagnilk.com reports that the film has so far collected a total of Rs 38.6 crore in Tamil Nadu alone.
10:48 AM Jan 20, 2025 IST | Chella
வசூல் வேட்டையில் பட்டையை கிளப்பும் ’மதகஜராஜா’     தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா
Advertisement

சுந்தர். சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம், ஆர்யா உள்ளிட்டோர் நடித்த மதகஜராஜா திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியானது. மேலும், படம் பார்த்த ரசிகர்களும் 12 வருஷ பழைய படம் போல தெரியவில்லை. போரடிக்காமல் சிரிக்க வைத்து அனுப்புவதாக பாராட்டியுள்ளனர். இதனால், படத்தின் வசூல் முதல் நாளே பிக்கப் ஆகிவிட்டது. இந்நிலையில், விஷாலின் மத கஜ ராஜா படம் முதல் நாளில் சிறப்பான ஓபனிங்கை பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

அதுமட்டுமின்றி இந்த பொங்கல் வின்னர் ’மத கஜ ராஜா’ தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையே, சமீபத்தில் விஷாலின் உடல்நலம் குறித்து ஆளுக்கொரு கருத்துக்களை யூடியூபில் பேசி விமர்சித்து வந்தனர். இந்நிலையில், தனக்கு இருந்தது வெறும் வைரல் ஃபீவர் தான். அன்றைய தினம் எங்கும் போக வேண்டாம் என வீட்டில் சொல்லியும், சுந்தர் சாருக்காக மட்டுமே வந்தேன். நண்டு சிண்டுகளுக்கு எல்லாம் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நான் வீழ்வேன் என நினைக்காதீர்கள் என விஷால் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், மதகஜராஜா திரைப்படம் வெளியாகி 8ஆம் நாளான நேற்று படம் 3.47 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தமாக இதுவரை 38.6 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாக சாக்னில்க் டாட் காம் இணையதளம் தெரிவித்துள்ளது. இப்படம் வெளியான முதல் நாளில் அதிகபட்சமாக 3.2 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More : செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் மூலம் ரூ.50 லட்சம் பெறுவது எப்படி..? எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்..? பெற்றோர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tags :
Advertisement