மான் கீ பாத்: சந்திராயன்-3 வெற்றி முதல் ராமர் கோவில் வரை.! 2023 இந்தியாவின் சாதனைகளை பட்டியலிட்ட பிரதமர் மோடி.!
இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி அகில இந்திய வானொலியின் மூலமாக நாட்டு மக்களுடன் மான் கீ பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் உரையாடி வருகிறார். 2023 இன் கடைசி நாளான இன்று பிரதமர் மோடி கலந்து கொண்ட மான் கீ பாத் நிகழ்ச்சியின் 108 வது எபிசோடு ஆல் இந்திய ரேடியோவில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு பேசிய பாரத பிரதமர் 2023 ஆம் ஆண்டில் இந்தியா சந்தித்த சவால்களையும் செய்த சாதனைகளையும் பட்டியலிட்டு பேசினார். மேலும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் மற்றும் அதன் சிறப்பம்சங்களையும் விளக்கினார். மேலும் ஏஐ தொழில்நுட்பம் காசியில் நடைபெற்ற தமிழ் சங்க மாநாட்டில் எந்த அளவிற்கு இந்தியை தமிழில் மொழி பெயர்த்தது என்பது குறித்து வெகுவாக பாராட்டி இருந்தார்.
மேலும் பிரதமர் அவர்கள் சந்திராயன் செயற்கைக்கோள் விண்வெளியில் வெற்றிகரமாக ஏவப்பட்டதிலிருந்து ஜி20 மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது வரை 2023 ஆம் வருடத்தில் இந்திய அரசின் சிறப்பான சாதனைகளைப் பட்டியலிட்டு கூறியிருக்கிறார். அவர் பேசிய தொகுப்பில் இருந்து சில சிறப்பான அம்சங்களை நாம் இங்கு காணலாம்.
பாரதப் பிரதமர் மோடியின் மான் கீ பாத் உரையின் சிறப்பம்சங்கள்:
புதிய கண்டுபிடிப்புகளின் மையமாக இந்தியா விளங்கி வருகிறது. 2015 ஆம் ஆண்டு 81-வது தரவரிசையில் இருந்த நம் நாடு 2023 ஆம் ஆண்டு உலக அளவிலான கண்டுபிடிப்பாளர்களின் பட்டியலில் 40-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இது ஒரு மகத்தான சாதனை என குறிப்பிட்டார்.
இந்த 108 எபிசோடுகளிலும் பொதுமக்கள் உற்சாகமாக கலந்து கொண்டு தங்களது பங்களிப்பையும் உற்சாகத்தையும் வழங்கி வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் 2023 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்க இருக்கிறோம். எத்தனை ஆண்டுகள் மாறினாலும் நம் நாட்டின் வளர்ச்சி நிற்கப் போவதில்லை. வெற்றிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் என தெரிவித்தார்.
சந்திராயன் சேர்க்கை கோளின் வெற்றி குறித்து பேசிய பிரதமர் இன்று கூட அனேக மக்கள் எனக்கு சந்திராயன் -3 செயற்கைக்கோளின் வெற்றி குறித்து குறுஞ்செய்திகள் அனுப்புகின்றனர்.இது நமது தேசத்தின் வெற்றி. மேலும் நமது தேசத்தில் இருக்கும் விஞ்ஞானிகளின் வெற்றி. குறிப்பாக நம் நாட்டின் பின் விஞ்ஞானிகளை நினைத்து மிகவும் பெருமிதம் கொள்கிறேன் என தெரிவித்தார்.
விளையாட்டுப் போட்டிகளில் 2023 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சிறந்த ஆண்டாக அமைந்திருக்கிறது. நம் நாட்டின் தடகள வீரர்கள் தங்களது அபார திறமையின் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 17 பதக்கங்களை வென்றனர். உடல் ஊனமுற்றோருக்கான ஆசிய போட்டிகளில் 111 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். இந்த வருடம் நம் நாட்டில் நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கோப்பையிலும் இந்தியா தனது சிறப்பான ஆட்டத்தால் மக்களின் மனதை வென்றிருக்கிறது. 2024 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக தீவிரமாக தயாராகி வருகிறோம். அதிலும் நாம் பல வெற்றிகளை குவிப்போம். தேசம் முழுவதும் இணைந்து விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து வருகிறது என்று தெரிவித்தார்.
நம் தேசமெங்கும் தன்னம்பிக்கை நிரம்பி இருக்கிறது. நம் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வலிமை பெற்ற இந்தியா என்ற உணர்வோடு திகழ்கிறோம். வர இருக்கின்ற ஆண்டிலும் இதே உணர்வோடு இணைந்து தேசத்தை வலுப்புறச் செய்வோம். வருகின்ற 2024 ஆம் ஆண்டும் நமது உத்வேகமும் உற்சாகமும் வெற்றி வேட்கையும் தன்னம்பிக்கையும் அதிகரிக்க வேண்டும் என தெரிவித்தார்.
ராமர் கோவில் குறித்து பேசிய பிரதமர் மோடி நம் இந்திய தேசம் முழுவதும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக உற்சாகமாக இருக்கிறது. மக்கள் ஒவ்வொருவரும் தங்களது இறை பக்தியையும் உணர்வுகளையும் வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். சிலர் பஜனை பாடல்களை எழுதியும் பாடியும் தங்களது உணர்வுகளை வெளிக்காட்டுவது தேசத்தின் அடையாளமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.