For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஒரு முறை முதலீடு செய்தால் நீங்கள் தான் பணக்காரர்..!! கடனே இல்லமால் வீடு, கார் வாங்கலாம்..!! எப்படி தெரியுமா..?

We give you a little advice on how to build a house without taking out a loan.
08:11 AM Nov 28, 2024 IST | Chella
ஒரு முறை முதலீடு செய்தால் நீங்கள் தான் பணக்காரர்     கடனே இல்லமால் வீடு  கார் வாங்கலாம்     எப்படி தெரியுமா
Advertisement

கடனே வாங்காமல் வீடு, கார், திருமணமா..? யார்க்கிட்ட கதை விடுறீங்க என்பதுதானே உங்கள் மைண்ட் வாய்ஸ். உண்மைதான் இன்றைய காலகட்டத்தில் கடன் வாங்காமல் எதுவுமே செய்ய முடியாது என்று நிலை உருவாகிவிட்டது. புதிதாக நான்கு நல்ல சட்டைகள் வாங்க வேண்டுமென்றால் கூட பலருக்கு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர்.

Advertisement

வெறும் கையில் எப்போதுமே முழம் போட முடியாது. கடன் வாங்காமல் நம் கனவுகளை எல்லாம் நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமென்றால், சரியான திட்டமிடல் கட்டாயம் தேவை. முதலில் கையிலிருக்கும் பணத்தை எப்படி செலவு செய்கிறோம் என்பதை கண்டறிய வேண்டும். செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமித்து பழக வேண்டும். அதன் பிறகு சேமித்த பணத்தை முதலீடு செய்ய வேண்டும்.

சாதாரண மக்களின் அதிகபட்ச ஆசை சொந்த வீடு மற்றும் நிலம் வாங்குவது தான். ஆனால், தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பலருக்கும் அந்த கனவு நிறைவேறாமல் போய்விடுகிறது. சிலர் வீடு கட்டுவதற்கு லோன்களை நம்பி இருந்தாலும், அவற்றுக்கு இ.எம்.ஐ. கட்டியே வாழ்நாள் முழுவதும் ஓடிவிடும். இதனால் கடன் வாங்கலாமா? வேண்டாமா? என்ற சிந்தனையில் காலம் நகர்ந்து விடும். எனவே, கடன் வாங்காமல் வீடு கட்டுவது எப்படி என்பது குறித்த சிறிய ஆலோசனையை உங்களுக்கு வழங்குகிறோம்.

ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீடு வாங்க முன்பணமாக ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை கடன் வாங்க வேண்டும். அதற்கு மாறாக மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.10 லட்சத்தை ஒரே நேரத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 15% வட்டி கிடைக்கும். அதன்படி பார்த்தால், 10 ஆண்டுகளில் ரூ.40 லட்சம் கிடைக்கும். 40 லட்சம் கடன் வாங்கும் பட்சத்தில் 20 ஆண்டுகளுக்கு ரூ.36,000 வட்டி செலுத்த வேண்டியிருக்கும். அந்த பணத்தையும் சேமித்தால் ரூ.68 லட்சம் வரை உங்களால் சேமிக்க முடியும். எனவே, 10 ஆண்டுகளில் உங்கள் கையில் சேமிப்பாக ரூ.1.08 கோடி இருக்கும். அதை வைத்து கடன் இல்லாமல் உங்களால் வீடு என்ன ஆடம்பரமாகவே வாழ முடியும்.

Read More : மலிவு விலை வீடுகளுக்கான வரையறை ரூ.80 லட்சமாக உயர்வு..? வீட்டு கடன்களுக்கான வட்டியில் 100% விலக்கு..? வெளியாகும் அறிவிப்பு..?

Tags :
Advertisement