முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஹிட்லரிடம் இருந்து ஆடம்பர பரிசு.. 350 மனைவிகளுடன் வாழ்ந்த இந்த இந்திய மன்னர் பற்றி தெரியுமா..?

Do you know about the king who received a luxurious gift from Hitler?
03:07 PM Jan 09, 2025 IST | Rupa
Advertisement

ஆடம்பர வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்ற பல இந்திய அரசர்களைப் பற்றி நாம் அனைவரும் நிச்சயம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஹிட்லரிடம் இருந்து ஆடம்பர பரிசை பெற்ற மன்னரை பற்றி தெரியுமா? 350 பெண்களை திருமணம் செய்த இந்த மன்னர் ஒரு நாளில் 20 பவுண்டு உணவை சாப்பிடுவாராம். அவர் வேறு யாருமில்லை. பட்டியாலா சமஸ்தானத்தின் மகாராஜா பூபிந்தர் சிங்.

Advertisement

யார் இந்த பூபிந்தர் சிங்?

முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு 1763 ஆம் ஆண்டு பாபா ஆலா சிங் அவர்களால் நிறுவப்பட்ட பாட்டியாலசமஸ்தானம், ஆங்கிலேயர்களுடன் வலுவான உறவைக் கொண்டிருந்தது. பஞ்சாபின் வளமான சமவெளிகள் இப்பகுதிக்கு மகத்தான செல்வத்தைக் கொண்டு வந்து, இந்தியாவின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த சமஸ்தானங்களில் ஒன்றாக மாற்றியது.

பாட்டியாலாவின் ஆட்சியாளர்கள் ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் மத்திய கிழக்கில் தங்கள் இராணுவப் பிரச்சாரங்களை ஆதரிப்பதன் மூலம் ஆங்கிலேயர்களுடனான தங்கள் உறவுகளை வலுப்படுத்தினர்.

1891 ஆம் ஆண்டு ஜாட் சீக்கிய புல்கியன் வம்சத்தில் பிறந்த பூபிந்தர் சிங், 9 வயதில் அரியணை ஏறினார். 1938 வரை ஆட்சி செய்த பாட்டியாலாவின் மகாராஜா பூபிந்தர் சிங் மிகவும் பிரபலமான மன்னர் ஆவார். நகைகள் முதல் சொகுசு கார்கள் வரை அவரிடம் பல ஆடம்பர பொருட்கள் இருந்தன. அவர் 27 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருந்தார்.

பாரிஸில் வடிவமைக்கப்பட்ட பிரபலமான 'பாட்டியாலா நெக்லஸ்' உட்பட நகைகளையும் அவர் வைத்திருந்தார். இதன் மூலம் இவர் இந்தியாவின் மிகவும் ஆடம்பரமான அரசர்களில் ஒருவர் என்ற பெருமையை பெற்றார்.

தனியார் விமானத்தை சொந்தமாக வைத்திருந்த முதல் இந்தியரும் பூபிந்தர் சிங் தான். இதற்காக அவர் பாட்டியாலாவில் ஒரு விமான ஓடுதளத்தை கட்டினார்.

350 மனைவிகள், ஆடம்பர வாழ்க்கை

லாரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லாபியர் ஆகியோர் தங்கள் "நள்ளிரவில் சுதந்திரம்" என்ற புத்தகத்தில் மகாராஜாவின் உணவு பழக்கம் பற்றி குறிப்பிட்டுள்ளனர். அவர் ஒரு நாளில் 20 பவுண்ட் உணவை சாப்பிட்டதாகவும் குறிப்பாக குருவியின் மூளையை விரும்பி சாப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஜா பூபிந்தர் சிங் ஆடம்பர அரண்மனையில் வசித்து வந்தார். அவரின் அரண்மனையில் பெண்கள் கூட்டம் எப்போதும் நிறைந்திருக்குமாம். ஏனெனில் அவர் 350 பெண்களை திருமணம் செய்தாராம். மேலும் அவர் தனக்கென பிரான்ஸ் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களின் குழு ஒன்றையும் தனியாக நியமித்திருந்தாராம். இந்த நிபுணர்களின் மூலம் தனது தோற்றத்தை தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டாராம்.

ஹிட்லர் வழங்கிய ஆடம்பர பரிசு

மஹாராஜா பூபிந்தர் சிங் பற்றி மற்றொரு சுவாரஸ்ய தகவலும் உள்ளது. 1935 ஆம் ஆண்டு, அவர் ஜெர்மனிக்கு பயணம் செய்தபோது, ​​அடால்ஃப் ஹிட்லர் மகாராஜா பூபிந்தர் சிங்கிற்கு ஒரு மேபேக் காரை பரிசளித்தார். இது ஒரு அரிய கௌரவமாகும். ஏனெனில் ஹிட்லர் மற்ற இரண்டு ஆட்சியாளர்களுக்கு மட்டுமே கார்களை பரிசளித்தார்: எகிப்தின் மன்னர் ஃபாரூக் மற்றும் நேபாளத்தின் ஜூத்தா ஷம்ஷேர் ஜங் பகதூர் ராணா ஆகியோருக்கு மட்டுமே பரிசளித்தார்.

ஜெர்மனிக்கும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டால் மகாராஜாவின் ஆதரவை பாதுகாக்க ஹிட்லர் கருதியதாகவும், அதனால் அவருக்கு காரை பரிசாக வழங்கியதாகவும் கருதப்படுகிறது.

மகாராஜா பூபிந்தர் சிங்கிற்கு பரிசாக வழங்கப்பட்ட மேபேக், இதுவரை தயாரிக்கப்பட்ட 6 வாகனங்களில் ஒன்றாகும். சக்திவாய்ந்த வாகனமாக இருந்த இந்த கார், 12 செப்பெலின் என்ஜின்களைக் கொண்டிருந்தது.

இந்த மேபேக் கார் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு, பாட்டியாலாவில் உள்ள மோதி பாக் அரண்மனையின் கேரேஜில், மகாராஜாவின் விரிவான ஆடம்பர வாகனங்களின் சேகரிப்புடன் சேமிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் தொடங்கியபோது, ​​மகாராஜா பூபிந்தர் சிங் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து மேபேக்கை அரண்மனைக்குள் மறைத்து வைத்தார், அங்கு அது பயன்படுத்தப்படாமல் இருந்தது.

மகாராஜா பூபிந்தர் சிங்கின் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் மகாராஜா யாதவிந்திர சிங் மன்னராக பதவியேற்றார். 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது, ​​பாட்டியாலா உள்ளிட்ட சுதேச மாநிலங்கள் ஒன்றிணைக்கப்பட்டு PEPSU (பாட்டியாலா மற்றும் கிழக்கு பஞ்சாப் மாநிலங்கள் ஒன்றியம்) உருவாக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில், மேபேக் கார் முதன்முறையாக பஞ்சாபில் பதிவு செய்யப்பட்டது, அதில் '7' என்ற எண் பலகை இருந்தது.

பல அரச குடும்பங்கள் காலத்திற்கு ஏற்ப மாறியதைப் போலவே, பாட்டியாலா அரச குடும்பமும் இறுதியில் ஹிட்லர் வழங்கிய ஆடம்பர் காரையும் சேர்ந்து அதன் சொத்தின் பெரும்பகுதியை விற்றது. இந்த கார் இப்போது அமெரிக்காவில் ஒரு தனியார் சேகரிப்பாளரிடம் உள்ளது. இந்த காரின் மதிப்பு கிட்டத்தட்ட 5 மில்லியன் டாலர்கள் (தோராயமாக ரூ. 50 கோடி) ஆகும்..

Read More : இந்தியாவில் உள்ள டாப் 5 மர்மமான குகைகள்.. திகிலூட்டும் தகவல்கள் இதோ..!!

Tags :
adolf hitlerindia kingsmaharaja bhupinder singhmaybachPatialapunjab maharaja
Advertisement
Next Article