For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Shocking | தங்கம் விலை கிடுகிடு உயர்வு..!! ஜெட் வேகத்தில் உயர்வதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

In Chennai today (January 10), the price of gold jewelry rose by Rs. 200 per sovereign and is being sold at Rs. 58,280.
10:04 AM Jan 10, 2025 IST | Chella
shocking   தங்கம் விலை கிடுகிடு உயர்வு     ஜெட் வேகத்தில் உயர்வதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி     இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா
Advertisement

இந்தியாவை பொறுத்த வரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

Advertisement

இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பாதுகாப்பு கருதில் பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. விலை அதிகரித்தாலும் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று (ஜனவரி 10) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.58,280-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ.7,285-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.101ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 அதிகரித்து ரூ.1,01,000-க்கும் விற்பனையாகிறது. தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Read More : ”வடிவேலு காமெடி தான் நினைவுக்கு வருது”..!! சும்மா இருந்தே லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இளைஞர்..!! ஆண்டுக்கு ரூ.70 லட்சம் கிட்ட சம்பாதிக்குறாரு..!!

Tags :
Advertisement