முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சந்திர கிரகணம் 2024..! கிரகணத்தின் போது செய்யக்கூடாதவை.., செய்ய வேண்டியவை..!

Lunar Eclipse 2024..! Do's and don'ts during eclipse..!
05:25 AM Sep 18, 2024 IST | Kathir
Advertisement

வானில் சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் நிகழ்வு கிரகணங்கள் எனப்படுகிறது. இந்த நிகழ்வின் போது, பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும், நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் இன்று (செப்டம்பர் 18 ஆம் தேதி) நிகழவுள்ளது. இந்த கிரகணம் பௌர்ணமி நாளில் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திர கிரகணம் காலை 06:11 மணிக்கு தொடங்கி காலை 10.17 மணிக்கு முடிவடைகிறது. இந்த சந்திர கிரகணம் மொத்தம் 4 மணி நேரம் 6 நிமிடங்கள் நீடிக்கும்.

Advertisement

இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 25, 2024 அன்று நிகழ்ந்தது. அந்த முதல் சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை. அதே போல் இன்று நடக்கவுள்ள இரண்டாவது சந்திரா கிரகணத்தை இந்தியாவில் பல பகுதிகளில் காணமுடியாது. இது ஒரு பகுதி சந்திர கிரகணமாக இருக்கும், இந்த கிரகணத்தை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் மட்டுமே காண முடியும். குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் உட்பட நாட்டின் பிற பகுதிகளில் பெனும்பிரல் கட்டம் மட்டுமே தெரியும்.பொதுவாக சந்திர கிரகணத்தின் தாக்கம் கிரகணத்திற்கு 9 மணி நேரத்திற்கு முன்பே தொடங்கும். ஆனால் இன்று நடக்கவிருக்கும் கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால் இது பொருந்தாது.

சந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடாதவை: கிரகணம் ஏற்படும்போது காய்கறியை நறுக்குதல் உள்ளிட்ட சமையல் வேலைகளை செய்யக்கூடாது. மேலும் உணவு உட்கொள்ளவே கூடாது. கிரகணத்தின் போது ஊசியில் நூல் கோர்ப்பது, தையல் வேலை பார்ப்பது போன்றவை கூடாது. பெரும்பாலும் கிரகண நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக கிரகண நேரத்தில் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும், இந்தச் சமயத்தில் கர்ப்பம் தரித்தால் பிறக்கும் குழந்தகளுக்கு குறைபாடு ஏற்படக்கூடும் என்கின்றனர் பெரியவர்கள்.

குறிப்பாக கர்ப்பிணிகள் கிரகண நேரத்தில் கவனமாக இருக்கவும், மேலும் கைகளில் கத்தி அல்லது கூர்மையான பொருட்களை வைத்திருக்கக்கூடாது, காய்கறி நறுக்கக் கூடாது என்றும் மீறிச் செய்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உதட்டில் அண்ணப்பிளவு பாதிப்பு ஏற்படும் என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு. இதனை "கிரகணமூலி" என்று கூறுவார்கள். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் சிலரால் இன்றும் நம்பப்படுகிறது.

கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை: கிரகணத்தின் போது ஏற்கனவே செய்து வைத்த உணவு மற்றும் தண்ணீரில், தர்ப்பை அல்லது துளசி இலைகளை போட வேண்டும். கிரகணத்திற்குப் பிறகு அவற்றை உட்கொள்ளலாம். கிரகண நேரத்தில் வீடுகளில் விளக்கேற்றி வைத்து இறைவனை வழிபடலாம். கிரகண சமயத்தில் ஆற்றலை சமநிலைப்படுத்த அமைதியான செயல்களில் ஈடுபடுங்கள்.தியானம், யோகா போன்றவையை பயிற்சி செய்யுங்கள். ஓய்வு மற்றும் தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.

Tags :
2024 lunar eclipse timelunar eclipse 2024lunar eclipse 2024 in india date and timelunar eclipse meaning in tamillunar eclipse september 2024September 18september 18 2024 lunar eclipse timeseptember 2024 lunar eclipse time
Advertisement
Next Article