சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் லுலு ஹைப்பர் மார்க்கெட்..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!
லுலு ஹைப்பர் மார்க்கெட், 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் திறக்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அடுத்த சில மாதங்களில், மெட்ரோ ரயில் பயணிகள், மெட்ரோ ரயிலில் ஏறும் முன், மளிகைப் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். வீட்டிற்கு தேவையான பொருட்களை எளிதாக அவர்கள் மெட்ரோ ரயில் நிலையத்திலேயே இனி வாங்கிக் கொள்ள முடியும்.
அதாவது, சென்னை சென்ட்ரல், ஷெனாய் நகர் மற்றும் விம்கோ நகர் ஆகிய நிலையங்களில் ஹைப்பர் மார்க்கெட் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ நிலையங்களில் ஹைப்பர் மார்கெட்டின் நகர விற்பனை நிலையங்கள் இருப்பதால், மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் வருகை அதிகரிக்கலாம் என்று CMRL அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஷெனாய் நகரில், திரு.வி.கா பூங்காவுக்கு கீழே ஒரு லட்சம் சதுர அடியில் ஹைப்பர் மார்க்கெட் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை சென்ட்ரலில், 28,000 சதுர அடியில் கான்கோர்ஸ் மட்டத்திலும், விம்கோ நகரில், மெட்ரோ ரயில் பராமரிப்புக் மையத்திற்கு மேல் 40,000 சதுர அடி இடத்திலும் ஹைப்பர் மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது. சென்ட்ரல் மற்றும் ஷெனாய் நகர் மெட்ரோ நிலையங்களில் உள்ள ஹைப்பர் மார்க்கெட்களை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்றில் இருந்து 3 மாதங்களுக்குப் பிறகு, விம்கோ நகரில் மெட்ரோ திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More : பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறை..!! இன்று மாலை 5 மணிக்கு..!! விஜய் டிவி அதிரடி அறிவிப்பு..!!