காதல், காமம்..!! மாணவிகளின் உணர்ச்சிகளை தூண்டும் ஆபாச பேச்சு..!! அடங்காத பேராசிரியர்..!! ஆட்டம் காண வைத்த ஸ்டூடன்ஸ்..!!
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அடுத்த தண்ணீர்பந்தம்பட்டியில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் முதல்வர் பணியிடம் காலியாகவுள்ள நிலையில், நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி முதல்வர் கீதா, கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில், இக்கல்லூரியின் கெளரவ விரிவுரையாளராக பொள்ளாச்சியைச் சேர்ந்த அருள் செல்வம் பணியாற்றி வந்தார்.
இவர் உடை, ஆடை மற்றும் அணிகலன்கள் குறித்து பாலியல் தொந்தரவு செய்யும் வகையில் பேசியதாக 3ஆம் ஆண்டு மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளார். அவரைத் தொடர்ந்து காதல், காமம் உணர்ச்சி போன்ற தேவையில்லா பேச்சுகளை கல்லூரியில் பாடம் எடுக்கும் போது பேசுவதாக 28 மாணவிகள் கையெழுத்திட்டு மற்றொரு புகாரை துறைத் தலைவரிடம் அளித்தனர். மாணவிகள் புகாரளித்து 2 மாதங்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மாணவிகளையும், பெண் பேராசிரியர்களையும் அருள்செல்வம் புகைப்படம் எடுத்ததாக மற்றொரு குற்றச்சாட்டு வெடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் பணியாளர்கள் ஒன்றிணைந்து, போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அருள்செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும், முதல்வரின் தனிப் பிரிவு, மாவட்ட நிர்வாகம், மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் ஆகியோருக்கும் புகாரை அனுப்பி வைத்தனர். இதையடுத்து, மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் குணசேகரன், புகாரளித்த மாணவிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், மாணவிகள், மாணவர்கள், பெண் பணியாளர்கள் என அனைவரும் அருள்செல்வம் மீதான புகார்களை உறுதிப்படுத்தினர்.
இந்த விசாரணையின் முடிவில் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் கீதா, பாலியல் புகாரில் சிக்கிய கெளரவ விரிவுரையாளர் அருள்செல்வத்தை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இச்சம்பவம் குறித்து வேடசந்தூர் அரசு கலை கல்லூரி நிர்வாகம் கூறுகையில், “புகார் அளித்த மாணவிகள் கௌரவ விரிவுரையாளர் அருள் செல்வம் கல்லூரியில் இருந்து நீக்கினால் போதுமானது என கூறினர். அதன் அடிப்படையில் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. மேலும், கல்லூரியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும்” என தெரிவித்தனர்.
Read More : முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!! இனி தங்கப் பத்திர திட்டம் கிடையாது..!! மத்திய அரசு திடீர் முடிவு..!!