For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஓட்டல் ஊழியருடன் ரூம் எடுத்து உல்லாசம்..!! பிரியாணி சாப்பிட்டுவிட்டு கிளம்பிய இளம்பெண்..!! சென்னை லாட்ஜில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

He had taken a room in D. Nagar with a woman named Aishwarya. The two had been having fun there.
10:37 AM Dec 12, 2024 IST | Chella
ஓட்டல் ஊழியருடன் ரூம் எடுத்து உல்லாசம்     பிரியாணி சாப்பிட்டுவிட்டு கிளம்பிய இளம்பெண்     சென்னை லாட்ஜில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
Advertisement

சென்னை நுங்கம்பாக்கம் குமாரப்பா தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு (42). இவர், அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். கடந்த டிசம்பர் 8ஆம் தேதி காலை 11 மணிக்கு ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் தி.நகரில் ஒரு ரூம் எடுத்து தங்கியுள்ளார். அங்கு இருவருமே உல்லாசமாக இருந்துள்ளனர். அன்றிரவு 7.30 மணியளவில் ஐஸ்வர்யா மட்டும் தனியாக புறப்பட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

Advertisement

இதற்கிடையே, நேரம் முடிந்துவிட்டதால் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி மதியம் 2.30 மணியளவில் லாட்ஜ் ஊழியர்கள் அறையை காலி செய்ய சொல்வதற்காக சுரேஷ்பாபு தங்கியிருந்த அறையின் கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால், அந்த அறையின் மற்றொரு சாவியை பயன்படுத்தி ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, சுரேஷ்பாபு அறையில் உள்ள கட்டில் மேல் ஆடைகள் எதுவும் இல்லாமல் நிர்வாண நிலையில், சடலமாக கிடந்துள்ளார்.

உடனே இதுகுறித்து பாண்டிபஜார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், அங்கு விரைந்த போலீசார், சுரேஷ்பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சுரேஷ்பாபுவுடன் ஓட்டலில் தங்கியிருந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், குடும்ப வறுமை காரணமாக கடந்த 20 நாட்களுக்கு முன்பு சுரேஷ்பாபு வேலை செய்யும் ஓட்டலில் பணி பெண்ணாக வேலைக்கு சேர்ந்தேன். உன்னிடம் தனியாக பேச வேண்டும் எனக் கூறி சுரேஷ் பாபு தன்னை விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தேவைக்கு பயன்படுத்திக் கொண்டார். மாலை இருவரும் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, இரவு 7.30 மணிக்கு விடுதியில் இருந்து நான் புறப்பட்டு விட்டேன்’ என்று ஐஸ்வர்யா கூறியிருக்கிறார். இதையடுத்து, பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோது சுரேஷ்பாபு இறந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Read More : ஒரே நேரத்தில் கணவனும், கள்ளக்காதலனும்..!! வலி தாங்க முடியல..!! விபரீத முடிவெடுத்த இளம்பெண்..!!

Tags :
Advertisement