For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இன்ஸ்டாவில் மலர்ந்த காதல்..!! திருமணத்திற்கு பின் வெடித்த சண்டை..!! தலையில் ஒரே போடு..!! மனைவிக்கு நேர்ந்த சோகம்..!!

Silambarasan settled in a rented house near Kattumannarko Boys High School.
04:44 PM Oct 17, 2024 IST | Chella
இன்ஸ்டாவில் மலர்ந்த காதல்     திருமணத்திற்கு பின் வெடித்த சண்டை     தலையில் ஒரே போடு     மனைவிக்கு நேர்ந்த சோகம்
Advertisement

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலை அடுத்த காலனி தெரு, கீழ் புளியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் சிலம்பரசன் (22). இவர், காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள எலக்ட்ரிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இன்ஸ்டாகிராம் மூலம் திருவாரூரை சேர்ந்த அபிநயா ஜோதி (19) என்ற பெண்ணிடம் பழகி வந்துள்ளார்.

Advertisement

பின்னர், நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, இருவரும் அபிநயா ஜோதியின் சொந்த ஊரான அகரத்த நல்லூர் கிராமத்தில் வசித்து வந்தனர். அப்போது, இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட பெண்ணின் தாயார் மற்றும் ஊர் பொதுமக்கள் சிலம்பரசனை எச்சரித்து அவரது சொந்த ஊரான கீழ் புளியம்பட்டு கிராமத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து, சிலம்பரசன் காட்டுமன்னார்கோவில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள வாடகை வீட்டில் குடியேறினார். இதனைத் தொடர்ந்து காட்டுமன்னார்கோயில் உள்ள எலக்ட்ரிக் கடையில் சொற்ப வருமானத்தில் வேலை பார்த்து வந்தார். இதில் போதிய வருமானம் இல்லாததால், இருவருக்கும் தினந்தோறும் சண்டை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அபிநயா ஜோதி போன் பேசினால் அவர் மீது சந்தேகப்பட்டு சிலம்பரசன் அவரை அடித்து, திட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று இரவு சிலம்பரசன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரத்தில் சிலம்பரசன் அருகில் இருந்த கட்டையை எடுத்து மனைவி அபிநயா ஜோடியை பலமாக தலையில் தாக்கியுள்ளார். இதில், அவர் சுருண்டு விழுந்து மயக்கம் ஆனார். இதனை கண்ட சிலம்பரசன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அபிநயா ஜோதியை காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, தகவல் அறிந்து வந்த சேத்தியாதோப்பு காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார், காட்டுமன்னார்கோயில் காவல் ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி சிலம்பரசனை கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read More : வரும் 20ஆம் தேதி மீண்டும் சம்பவம் இருக்கு..!! இன்று 8 மாவட்டங்களில் பொளக்க போகும் கனமழை..!!

Tags :
Advertisement