லாஸ் ஏஞ்சல்ஸ் பேரழிவு!. புகழ்பெற்ற கோட்டை முதல் பிரபலங்களின் வீடுகள் வரை!. காட்டுத் தீயில் எரிந்து நாசம்!. உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்!
Wildfire: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத் தீ, தொடர்ந்து கொழுந்து விட்டு எரிகிறது. புகழ்பெற்ற ஹாலிவுட் ஹில்ஸ் மலைப் பகுதியை காட்டுத் தீ தொடர்ந்து கபளீகரம் செய்து வருகிறது. இந்த விபத்தில், இதுவரை பத்தாயிரம் வீடுகள், கட்டடங்கள் எரிந்து நாசமாகி உள்ளன. ஹாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட, 1.80 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் காட்டுத் தீ ஏற்பட்டு, கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. சூறாவளி அளவுக்கு பலத்த காற்று வீசுவதால், காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருகிறது. சுமார் 2,000 கட்டிடங்கள் மற்றும் வீடுகள் அழிந்துள்ளன, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பலத்த காற்று மற்றும் வறண்ட சூழல் காரணமாக தீயை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது.
ஒரு பக்கம் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபடும் நிலையில், மற்றொரு பக்கம் புதிதாக தீப்பிடிக்கிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளை, தீ சூழ்ந்துள்ளதால், கரும்புகை மண்டலம் உருவாகியுள்ளது. இதுவரை, 26,000 ஏக்கர் பரப்புள்ள வனப் பகுதி, தீயில் கருகியதாக கூறப்படுகிறது. வீடுகள், கட்டடங்களில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களும் முழுமையாக சேதமடைந்துள்ளன. தீயணைப்பு வீரர்கள், 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்
இதுவரை ஏழு பேர் இறந்துள்ளனர் என அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். அதேநேரத்தில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பல ஹாலிவுட் படங்கள் எடுக்கப்பட்டுள்ள ஸ்டூடியோக்கள் உள்ளிட்டவையும் தீயில் நாசமடைந்தன. ஒட்டு மொத்தமாக, 4.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உலக சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும், ஆஸ்கர் விருதுக்கு உரியோரை தேர்வு செய்வதற்கான கூட்டம், லாஸ் ஏஞ்சல்சில் இந்த வாரம் நடக்க இருந்தது; இது, 19ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிரபலங்களான பாரிஸ் ஹில்டன், பில்லி கிரிஸ்டல் மற்றும் ஆடம் பிராடி ஆகியோரின் வீடுகளும் காட்டுத் தீயில் கருகின. நிக்சன், கேசினோ போன்ற படங்களில் நடித்த நடிகர் ஜேம்ஸ் வூட்ஸ், பசிபிக் பாலிசேட்ஸ் ஆகியோரின் சொத்தும் நாசமாகின.
Readmore: தற்கொலை மையமாக மாறிய கோட்டா நகரம்!. 24 மணிநேரத்தில் நீட் மாணவர்கள் இருவர் தற்கொலை!. என்ன நடக்கிறது?