For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இன்று காலை 9 மணி முதல்...! உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாம்...! மிஸ் பண்ணிடாதீங்க...!

06:10 AM Feb 21, 2024 IST | 1newsnationuser2
இன்று காலை 9 மணி முதல்     உங்களைத் தேடி உங்கள் ஊரில்  திட்ட முகாம்       மிஸ் பண்ணிடாதீங்க
Advertisement

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் இன்று "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாம் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

Advertisement

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான அரசின் அனைத்துத் திட்டங்கள் மற்றும் சேவைகளை அவர்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு சேர்ப்பதில் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், மாற்றுத்திறனாளிகள் துறையினரால் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகை, வங்கிக்கடன், உதவி உபகரணங்கள் மற்றும் அரசின் பல்வேறு துறைகள் மூலம் வழங்கப்படும் நலத் திட்டங்கள் பெறுவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று ஆத்தூர் வட்டத்தில் நடைபெறும் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாமையொட்டி ஆத்தூர் நகராட்சி அண்ணா கலையரங்கத்தில் அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இச்சிறப்பு முகாமில் கலந்துகொள்ளும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், மார்பளவு புகைப்படம் 6 ஆகிய ஆவணங்களுடன் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌

Advertisement