முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Lok Sabha | மக்களவை தேர்தல் தேதி..!! இந்திய தேர்தல் ஆணைய வட்டாரம் முக்கிய தகவல்..!!

04:34 PM Feb 23, 2024 IST | 1newsnationuser6
Advertisement

மக்களவை தேர்தல் அட்டவணையை மார்ச் 13ஆம் தேதிக்கு பின்னர் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

மத்திய தேர்தல் குழு அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தேர்தல் ஆயத்த நிலையை ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் தற்போது, ​​தமிழ்நாட்டில் ஆய்வு செய்கின்றனர். அடுத்ததாக உத்தரப்பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் செல்லவுள்ளனர். இந்த பயணங்கள் மார்ச் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. எனவே, தேர்தல் அட்டவணை மார்ச் 13ஆம் தேதிக்கு பின்னர் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

முந்தைய 2019 மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அந்தாண்டு மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. 543 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற்றன. தொடர்ந்து மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் வாக்களிக்க, சுமார் 91.2 கோடி மக்கள் தகுதி பெற்ற நிலையில், அவர்களில் 67%-க்கும் அதிகமானோர் மட்டுமே வாக்களித்தனர். தரவுகளின்படி, இந்த ஆண்டு, சுமார் 97 கோடி மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் போன்ற மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

English Summary : Lok Sabha poll dates likely after March 13: Election Commission sources

Read More : செம குட் நியூஸ்..!! புத்தகத்தை பார்த்தே இனி தேர்வு எழுதலாம்..!! வருகிறது புதிய நடைமுறை..!! CBSE அதிரடி..!!

Advertisement
Next Article