Lok Sabha | அதிமுகவை அதிரவைத்த தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள்..!! ஒருவேளை இப்படித்தான் நடக்குமோ..?
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி அதிமுக கூட்டணியை விட 1 இடத்தில் கூடுதலாக வெல்லும் என்று இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. இந்த சர்வேக்கள் பல்வேறு அதிர்ச்சி தரும் விஷயங்களை வெளியிட்டு வருகின்றன. உதாரணமாக லோக்சபா தேர்தலில் அதிமுகவை விட பாஜக அதிக வாக்கு வங்கியை பெறும் என்று டைம்ஸ் நவ் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. இந்த சர்வேக்கள் பல்வேறு அதிர்ச்சி தரும் சுவாரசியமான விஷயங்களை வெளியிட்டு வருகின்றன. டைம்ஸ் நவ் - மேட்ரைஸ் என்சி இது தொடர்பாக கருத்து கணிப்புகளை மேற்கொண்டுள்ளன.
மக்களவையின் ஒட்டுமொத்த கணிப்பு :
மொத்த இடங்கள் : 543
பாஜக கூட்டணி : 366
இந்தியா கூட்டணி : 104
மற்றவை : 73
இதன் மூலம் பாஜக மீண்டும் முழு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதுபோக தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்றும் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39)
திமுகவின் இந்தியா கூட்டணி - 36
அதிமுக: 2
பாஜக: 1
மற்றவை: 0
அதே சமயம் தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வி அடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39) லோக்சபா தொகுதி கணிப்புகள் படி பாஜக 1 இடத்தில் மட்டுமே வெல்லும். திமுகவின் இந்தியா கூட்டணி - 36 இடங்களில் வெல்லும். 39 இடங்களில் இருந்து 3 இடங்களை திமுக இழக்கும் என்றாலும், பெரும்பான்மை இடங்களில் திமுகவே வெல்லும். அதிமுக 2 இடங்களில் வெல்லும். கடந்த முறை ஒரு தொகுதியில் வென்ற அதிமுக, கூடுதலாக ஒரு தொகுதியில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் இது தொடர்பாக கருத்து கணிப்புகளை மேற்கொண்டுள்ளன. அதன்படி, இப்போது தேர்தல் நடந்தால் தென்னிந்தியாவில் மொத்தமுள்ள 130 மக்களவைத் தொகுதிகளில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி 60 இடங்களையும், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக என்டிஏ 38 இடங்களை வெல்லக்கூடும். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், அதிமுக, பிஆர்எஸ், ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட மற்ற கட்சிகள் மீதமுள்ள 32 இடங்களில் வெற்றி பெறலாம் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆளும் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுகவின் இந்திய கூட்டணி 30 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 5 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் வெற்றிபெறலாம் என சர்வே கணித்துள்ளது. கட்சி வாரியாக, திமுக 20 இடங்களிலும், அதிமுக மற்றும் பாஜக தலா 4 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும், பாமக ஒரு இடத்திலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் வெற்றி பெறலாம். தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ-எம், விசிகே, ஐயுஎம்எல் மற்றும் பிற சிறிய கட்சிகளை உள்ளடக்கியது இந்தியா கூட்டணி. அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவுடன் புதுச்சேரியில் உள்ள ஒரே லோக்சபா தொகுதியில் பாஜக வெல்லும் சர்வே கூறுகிறது.
Read More : ’பாஜகவுக்கு மட்டும் தேசிய மலர் தாமரையை எப்படி கொடுத்தீங்க’..? NTK Seeman விளாசல்..!!