For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Lok Sabha Election | கருத்துக் கணிப்பு முடிவுகள்..!! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!!

08:43 AM Mar 30, 2024 IST | Chella
lok sabha election   கருத்துக் கணிப்பு முடிவுகள்     தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
Advertisement

ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Advertisement

நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்துடன் சேர்ந்து ஆந்திரா, அருணாச்சல், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தேர்தலும், 12 மாநிலங்களில் 25 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடக்கும் நாள் முதல் கடைசி கட்டத் தேர்தல் முடிவடையும் ஜூன் 1ஆம் தேதி மாலை 6.30 மணி வரை வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தபிறகு எந்த கருத்துக்கணிப்பு முடிவுகளையும் ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடைபெறும்போது கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டால், அது மற்ற இடங்களில் தேர்தலில் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், எப்போதும் இது போன்ற தடைகள் விதிக்கப்படுவது வழக்கம் தான்.

Read More : மக்களே உஷார்..!! இந்த நம்பரில் இருந்து ஃபோன் வந்தா எடுக்காதீங்க..!! மத்திய அரசு திடீர் எச்சரிக்கை..!!

Advertisement