தமிழகத்தில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை...! வானிலை மையம் எச்சரிக்கை...!
தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றில் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20 முதல் 24-ம் தேதி வரைஓரிரு இடங்களில் மிதமான மழைபெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 22-ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. தென் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 2 செமீ, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 1 செமீ மழை பதிவாகியுள்ளது.