"உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்" - ஆண்டிபயாடிக் மருந்துகள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்...!
பல்வேறு வகையான ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்தில் இருந்தாலும், முரண்பாடாக வரும் 2050-ஆம் ஆண்டிற்குள் ஆண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டென்ஸ் (AMR) இறப்புக்கான முக்கிய காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
டாக்டர் அலெக்சாண்டர் ஃப்ளெமிங் கடந்த 1928-ஆம் ஆண்டு பென்சிலின் என்ற முதல் ஆண்டிபயாடிக் மருந்தை கண்டுபிடித்தார். இதற்கு முன் உலகளவில் ஏற்பட்டு வந்த மரணத்திற்கு மிகவும் பொதுவான காரணமாக தொற்றுகள் இருந்தன. தற்போது பல்வேறு வகையான ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்தில் இருந்தாலும், முரண்பாடாக வரும் 2050-ஆம் ஆண்டிற்குள் ஆண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டென்ஸ் (AMR) இறப்புக்கான முக்கிய காரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆண்டுக்கு 10 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் இதனால் ஏற்பட கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அச்சுறுத்தல்களை சமாளிக்கும் முயற்சியில் உலகப் பொருளாதாரம் சுமார் 100 டிரில்லியன் டாலர்களுக்கு மேல் இழப்பை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது இந்தியாவின் தற்போதைய ஜிடிபி-யின் 25 மடங்குக்கு சமமான தொகை ஆகும். AMR-ஆல் ஏற்படும் இறப்புகளின் கவலையை உறுதிப்படுத்தும் வகையில் 100000-க்கும் மேற்பட்ட organisms-களின் சமீபத்திய ICMR கணக்கெடுப்பு, 2017-ஆம் ஆண்டிலிருந்து AMR விகிதம் சுமார் 20% அதிகரித்துள்ளதை வெளிப்படுத்துகிறது. ஹிந்துஜா மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் உமாங் அகர்வால் அதிக ஆண்டிபயாடிக்ஸ் எடுத்து கொள்வது தனிநபர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பகிர்ந்து கொண்டுள்ளார்.
AMR என்றால் என்ன? பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சைகள் மற்றும் ஒட்டுண்ணிகள் காலப்போக்கில் மாறி, தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதை கடினமாக்கும் மற்றும் மருந்துகள் எடுத்து கொண்டாலும் அதற்கான பலன் கிடைக்காத நிலை மூலம் AMR எனப்படும் ஆண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டென்ஸ் ஏற்படுகிறது. அதாவது மருந்துகள் எடுத்து கொண்டாலும் கிருமிகள் கொல்லப்படாமல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும். இதனால் தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பது கடினமாகிறது சில சமயங்களில் சிகிச்சை அளிப்பதே சாத்தியமற்றதாகும் நிலையும் ஏற்பட கூடும். AMR என்பது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்த கூடிய ஒரு அச்சுறுத்தலாகும். இதனிடமிருந்து நம்மையும் நமது வருங்கால சந்ததியினரையும் காப்பாற்றுவது நமது பொறுப்பு.
தவறான பயன்பாடு: ஆண்டிபயாடிக் மருந்துகளின் அதிக மற்றும் தவறான பயன்பாடு கம்யூனிட்டி முதல் மூன்றாம் நிலை கேர் சென்டர்கள் வரை ஒவ்வொரு மட்டத்திலும் காணப்படுகிறது. மருத்துவர்களிடையே Antimicrobial Stewardship ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தப்படும் அதே நேரம், ஆண்டிபயாட்டிக்ஸை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான நடைமுறைகளைப் பற்றி சாமானிய மக்களுக்கு கற்பிப்பதும் முக்கிய தேவையாக இருக்கிறது. இருமல், சளி மற்றும் காய்ச்சல் உள்ள எல்லா நோயாளிக்கும் ஆன்டிபயாடிக் தேவையில்லை.
ஆன்டிபயாடிக் மருந்துகள் எதற்கு எடுத்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வின்மை மற்றும் இவை எளிதில் கிடைக்கக்கூடிய மருந்துகளாக இருப்பது உள்ளிட்டவை பிரச்னையை மேலும் அதிகரிக்க செய்கிறது. இந்த சூழலில் நமது அண்டை மாநிலமான கேரளா மருத்துவ பரிந்துரை இல்லாமல் ஓடிசி ஆண்டிபயாடிக் மருந்துகளை விற்பனை செய்வதை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
எளிய மாற்றங்கள் கூட AMR விஷயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக தடுப்பூசிகள் ஆண்டிபயாடிக் பயன்பாட்டை குறைப்பதோடு, AMR-ஐ தடுக்கின்றன. இதனிடையே அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், குழந்தைகளுக்கு pneumococcal தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக பொதுவான ஆண்டிபயாட்டிக்ஸின் பயன்பாடு சுமார் 70% வரை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read More: “தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு சுத்தமா அறிவே கிடையாது” – வைரலாகும் தங்கர் பச்சான் வீடியோ!