முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சொந்த வீடு இல்லை என்ற கவலை இனி இல்லை!! பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் பற்றி தெரியுமா?? முழு விவரம் இதோ!!

Let's see how to get subsidy for building a house under the central government scheme.
07:35 AM Jun 21, 2024 IST | Mari Thangam
Advertisement

இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மிக முக்கிய திட்டமாக பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் உள்ளது. இத்திட்டத்தில், வீடற்ற ஏழை எளிய மக்கள் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்தால் ரூபாய் 2.67 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

Advertisement

இத்திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் இந்தாண்டுக்குள் கட்டிக் கொடுப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு தரப்பில் இருந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வீடுகளை கட்டி முடித்து மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மூன்று தவணையாக பணம் வழங்கப்படும். முதல் தவணையாக 50,000.., இரண்டாவது தவணையாக 1.50 லட்சம், மூன்றாவது தவணையாக 50,000 வழங்கப்படுகிறது. மொத்தம் 2.50 லட்சம் ரூபாயில் 1 லட்சத்தை மாநில அரசு வழங்குகிறது. மத்திய அரசு 1.50 லட்சம் மானியமாக கிடைக்கும்.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜன திட்டத்தின் தகுதி:

இந்த திட்டம் முதன்மையாக அனைவருக்கு வீட்டு வசதி வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. எனவே ஏற்கனவே ஒரு வீட்டை சொந்தமாகக் கொண்டவர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒரு வீட்டை வைத்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு இந்த திட்டத்தின் நன்மையை பெற தகுதி கிடையாது.

புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுங்கள். இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் https://pmaymis.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பது எப்படி.‌‌….?

முதலில் pmaymis.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்‌. அடுத்து இணையதளத்தின் மேல் நீங்கள் ‘Citizen Rating” என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்யவும். அடுத்து தங்குவதற்கு ஏற்ப விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் ஆதார் எண்ணை நிரப்பி, check என்பதை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து ஒரு ஆன்லைன் படிவம் திறக்கப்படும் ன, அதை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு, முழுமையான தகவலை மீண்டும் ஒருமுறை சரிபார்த்து சமர்ப்பிக்கவும். சமர்ப்பித்த பிறகு, உங்கள் திரையில் ஒரு விண்ணப்ப எண் காட்டப்படும். அதை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

Tags :
#Awas Yojana#Back House#Government Houseபிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்
Advertisement
Next Article