இரு கரம் கூப்பி அழைக்கிறேன்...! தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள்வோம்...! முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
அரசோடு கரம் கோத்து சகமனிதரின் துயர் துடைத்திட தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
அண்மைக் காலத்தில் சந்தித்திராத மோசமான புயலை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம். 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை விட, மிக்ஜாம் புயல் காரணமாக' இடைவிடாத பெருமழையாக எங்கெங்கும் கொட்டித் தீர்த்திருக்கிறது. முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் உயிர்ச்சேதம் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது.
மீட்பு, நிவாரணப் பணிகள் போர்க்கால வேகத்தில் நடந்துகொண்டு இருக்கிறது. இன்னலி்ல் இருக்கும் மக்களுடன் நமது அரசு என்றும் துணை நிற்கும். கட்சி வேறுபாடுகளைக் கடந்து, மக்கள் சக்தியின் துணைகொண்டு இயற்கைப் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களைவோம். இயற்கையின் கோரத் தாண்டவத்தை மனிதத்தின் துணைகொண்டு வெல்வோம். அரசோடு கரம் கோத்து சகமனிதரின் துயர் துடைத்திட தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள கரம்கூப்பி அழைக்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மீட்பு பணியில் அதிகாரிகள்;
புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கென தலா ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரலாறு காணாத மழை பொழிவு ஏற்பட்டுள்ளதால், புயல் கரையைக் கடந்த பிறகு உடன் மீட்பு பணிகளைத் துரிதப்படுத்தவும், மழை நீர் விரைவில் வடிவதை உறுதி செய்யவும்.
வெளி மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கில் சிறப்பு பணிக்கென வரவழைக்கப்பட்டுள்ள தூய்மை பணியாளர்களின் பணியினை ஒருங்கிணைக்கவும். சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு களத்தில் பணிபுரிந்து வரும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களுடன் கூடுதலாகப் பின்வரும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்: