முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிப்ரவரி 22ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்..!! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!!

01:35 PM Feb 12, 2024 IST | 1newsnationuser6
Advertisement

இன்று தொடங்கியுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்ரவரி 22ஆம் தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

2024ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் வாசிக்க மறுத்தது, ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு பதிலடி தந்தது என விறுவிறுப்புடன் நடைபெற்ற இன்றைய கூட்டம் தேசிய கீதம் இசைக்கப்பட்டு முடிவடைந்தது. பின்னர், சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆராய அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, "பிப்ரவரி 22ஆம் தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்" என்று தெரிவித்தார். ஆளுநர் உரை மீதான விவாதம், அதற்கான முதல்வர் பதிலுரை ஆகியவை பிப்ரவரி 15ஆம் தேதி வரை நடைபெறும். பிப்ரவரி 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பேரவைக்கு விடுமுறை. பின்னர் பிப்ரவரி 19ஆம் தேதியன்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

தொடர்ந்து மறுநாள் பிப்ரவரி 20ஆம் தேதியன்று வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலன்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். வரும் 22ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது என்று அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இந்த நாட்களில் ஆளுநர் உரை விவகாரம் தொடர்பாக பாஜகவும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அதிமுகவும் சட்டமன்றத்தில் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
சட்டப்பேரவை கூட்டத்தொடர்சட்டமன்றம்சபாநாயகர் அப்பாவுதமிழ்நாடு அரசு
Advertisement
Next Article