’தற்போதைய நடிகையை விடுங்க’..!! அப்போதே ஜெயலலிதாவிடம் குவிந்து கிடந்த தங்கம், வெள்ளி, புடவைகள்..!! மதிப்பு எத்தனை கோடி தெரியுமா..?
இளம் வயது முதலே பரதநாட்டியம் போன்ற பல கலைகளை கற்றுத் தேர்ந்தவர் நடிகையும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா. படிப்பிலும் அவரே முதல் மாணவி. திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு பல மொழிகளை எழுதவும், பேசவும் கற்றுக் கொண்ட அவர், ஆளுமை மிக்க ஒரு பெண்ணாக தமிழ் திரையுலகில் களம் இறக்கினார். குழந்தை நட்சத்திரமாக சில படங்களிலும் நடித்திருந்தாலும், 1965இல் வெளிவந்த "வெண்ணிற ஆடை" என்ற படத்தின் மூலம் தான் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் நாளடைவில், புரட்சித் தலைவர் எம்ஜிஆரோடு இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார்.
எம்ஜிஆரின் மறைவுக்குப் பின், அதிமுகவை பாதுகாத்து வந்த ஜெயலலிதா, முதல்வராக இருந்த காலகட்டத்தில் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கியதாக கூறப்பட்டது. இருப்பினும் அவருடைய மறைவுக்குப் பிறகு, அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்தியபோது, 10,000-க்கும் மேற்பட்ட புடவைகள், 1250 கிலோ வெள்ளி, 28 கிலோ தங்கம், 750 ஜோடிக்கும் மேற்பட்ட செருப்புகள் அங்கு இருந்ததாக தகவல் வெளியாகின. இன்றைய காலகட்டத்தில் இந்திய அளவில் மிகப்பெரிய பணக்கார நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் பலரை விட, அப்போதே மிகப்பெரிய செல்வந்தராக வாழ்ந்தவர் ஜெயலலிதா.
அவருடைய சொத்து மதிப்பு சுமார் 900 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில், சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் தனது 68-வது வயதில் ஜெயலலிதா காலமானார்.
Read More : ’அவள் எல்லாம் வெறும் பிசிறு தான்’..!! ’வளர விடக் கூடாது’..!! காளியம்மாள் குறித்து சீமான் பரபரப்பு பேச்சு..!!