முதல்வர் உத்தரவின் பேரில் அகிலேஷ் யாதவிற்கு அழைப்பு.! சூடு பிடிக்கும் அரசியல் களம்.!
தமிழக அரசின் சார்பில் முன்னாள் பிரதமர் சமூக நீதி காவலருமான விபி சிங்குக்கு சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான பணிகள் மும்முறமாக நடைபெற்று வந்த நிலையில் வருகின்ற 27ஆம் தேதி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அவரது திருவுருவ சிலை திறக்கப்பட இருக்கிறது .
இந்தியாவின் முன்னாள் பிரதமராக இருந்தவர் விஸ்வநாத் பிரதாப் சிங். இவர் உத்திர பிரதேச மாநிலத்தின் அலகாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அந்த மாநில முதல்வராக இருந்ததோடு பல்வேறு மத்திய அமைச்சர் பதவிகளிலும் இருந்து பின்னர் இந்திய பிரதமராகவும் சில காலம் பதவியிலிருந்தார். 1989 ஆம் ஆண்டு 11 மாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்த இவரது ஆட்சி காலத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஏராளமான திட்டங்களையும் உரிமைகளையும் வழங்கினார்.
இதன் காரணமாகவே இவர் சமூக நீதி காவலர் என அழைக்கப்படுகிறார். இவருக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதற்கான பணிகளும் துவங்கப்பட்டு தற்போது முடிவடைந்து இருக்கிறது. இந்த சிலை திறப்பு விழாவிற்கு இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவிற்க்கு விழா அழைப்பிதழை முதலமைச்சர் ஸ்டாலின் சார்பாக டி ஆர் பாலு வழங்கியிருக்கிறார் .
இதனால் இந்திய கூட்டணி தலைவர்கள் சென்னையில் நவம்பர் 27ஆம் தேதி கூட இருக்கிறார்கள்.. இவர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இந்திய கூட்டணியின் முக்கிய நிலைப்பாடுகள் பற்றிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தெரிகிறது அரசியல் விமர்சகர்கள் இந்த கூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.