UPSC வழியாக ஆர்.எஸ்.எஸ்-ல் உள்ளவர்களுக்கு பதவி..!! - ராகுல் காந்தி கண்டனம்
ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) வழியாக, தேர்வுகளும், நேர்காணல்களும் நடத்தி தகுதிபெற்றவர்களை, இந்திய ஆட்சிப்பணியாளர்களாக நியமிப்பதே நடைமுறை. இந்நடைமுறையில் கூட, உழைக்கும் மக்களுக்கு சரியான இடஒதுக்கீடு இல்லை என்ற குற்றச்சாட்டு, பல ஆண்டுகளாக நீடித்து வருகிறதே தவிர, அதற்கான தீர்வு கிடைத்தப்பாடில்லை.
இந்நிலையில், தேர்வு, நேர்காணல்கள் எல்லாம் எதற்கு என்று, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை நேரடியாக, இந்திய ஆட்சிப் பணியாளர்களாக்கியுள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு. யுபிஎஸ்சியானது இடஒதுக்கீடுகளே இல்லாமல் 10 இணை செயலாளர் பதவிகள், 35 இயக்குனர், துணை செயலாளர் பதவிகள் என மொத்தம் 45 பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதை முன்வைத்து பிரதமர் நரேந்திர மோடியை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி, அரசு அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்கிறது; இதன் மூலம் தலித்துகள், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டு உரிமையை பிரதமர் நரேந்திர மோடி பறித்துவிட்டதாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
இது குறித்து, தனது X தளத்தில் பதிவிட்ட மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "UPSC வழியாக தகுதிபெற்றவர்களை, இந்திய ஆட்சிப் பணியாளர்களாக்காமல், ஆர்.எஸ்.எஸ்-ல் உள்ளவர்களுக்கு பதவி வழங்கி, இந்திய அரசியலமைப்பை சீர்குலைய வைத்துள்ளது மோடி அரசு. இதன் வழி, SC,ST மற்றும் OBC வகுப்பினர்களுக்கான இடஒதுக்கீடு வெளிப்படையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை தகுதிபெற்ற இளைஞர்களின் உரிமைகளை சுரண்டுவாதகவும் அமைந்துள்ளது. இந்தியா கூட்டணி, இச்சுரண்டலை வன்மையாக கண்டிக்கிறது. இந்திய ஆட்சிப்பணியாளர்களை தனியார் மயமாக்கியது, இடஒதுக்கீடுக்கு இடப்பட்ட தடை" என பதிவிட்டுள்ளார்.
Read more ; நடிகர் மோகன்லாலுக்கு திடீர் உடல் நலக்குறைவு..!! மருத்துவமனையில் அனுமதி..!!