கோயிலில் திரை போட்டு மறைக்கப்பட்டிருந்தால் கடவுளை வழிபடலாமா.!
பொதுவாக நம்மில் பலரும் கோயிலுக்கு அடிக்கடி சென்று கடவுளை மனதார வேண்டி பிரார்த்தனை செய்து வருவோம். அவ்வாறு கோயிலுக்கு செல்லும்போது ஒரு சில நேரங்களில் அபிஷேக நேரம் எதுவென்று தெரியாமல் சென்றிருப்போம். அபிஷேக நேரம் என்பது விசேஷ நாட்களில் ஒவ்வொரு கோயிலிலும் மாறுபடும். இவ்வாறு ஒரு சில நேரத்தில் கோயிலுக்கு செல்லும்போது சன்னதியில் சாமி சிலைக்கு திரையிட்டு மறைக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறு மறைக்கப்பட்டு இருக்கும் நேரத்தில் ஒரு சிலர் திரையைப் பார்த்து கடவுளை வணங்கி விட்டு பிரார்த்தனை செய்வார்கள். அப்படி செய்யலாமா என்று நம்மில் பலருக்கும் சந்தேகம் இருக்கும். இது குறித்து தெளிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.
இவ்வாறு நேரம் காலம் தெரியாமல் கோயிலுக்கு செல்லும்போது சாமி சிலைக்கு திரையிட்டு மறைக்கப்பட்டிருக்கும் நேரத்தில் காத்திருந்து கடவுளை வணங்கி விட்டு செல்வதுதான் நல்லது. அவசர அவசரமாக கோவிலுக்கு சென்று விட்டு கடவுளை வணங்காமல் திரும்புவது பல கேடுகளை ஏற்படுத்தும். துரதிஷ்டம் வந்து சேரும்.
இவ்வாறு திரையிடப்பட்டிருக்கும் நேரத்தில் கோயிலுக்கு சென்று விட்டு அவசரமாக வெளியே செல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு கோயிலின் கோபுரத்திலும் விமான கலசம் இருக்கும். இந்த கலசத்தை பார்த்து மனதார வேண்டி அடுத்த முறை கடவுளை வந்து பார்க்கும் வரம் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும். கோயிலுக்கு செல்வது மன அமைதிக்காகவும், நிம்மதிக்காகவும் தான். எனவே எப்போதும் கோயிலுக்கு சென்று விட்டு அவசரமாக வெளியே செல்ல கூடாது. இது கோயிலுக்கு சென்ற பலனை தராது.