ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் மலர்.! இவ்வளவு நோய்களை தீர்க்குமா.!
பிரம்ம கமலம் மலர் என்பது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இமாச்சலப் பிரதேச பகுதிகளில் பூக்கும் அரிதான தாமரை பூவின் ஒருவகையாகும். இமாலய மலர்களின் ராஜா என்று அழைக்கப்படும் பிரம்ம கமலம் மலர் பார்ப்பதற்கு வெள்ளை நிறத்தில் அழகாகவும், மோசமான வாசனையுடையதாகவும் இருக்கும். பிரம்ம கமலம் மலர் பல நோய்களை தீர்த்து வந்ததால் இந்த மலர் பூப்பதை பார்ப்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பல சித்தர்களும் இந்த மலரை குறித்து ஓலைச்சுவடிகளில் குறிப்பிட்டு வைத்துள்ளனர். கசப்பு சுவையுடன், மோசமான வாசனையுடனும் இருக்கும் இந்த பிரம்ம கமலம் மலர் பல்வேறு வகையான நோய்களை தீர்க்கும். அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்?
1. இந்த மலர் கல்லீரலில் ஏற்படும் நோய் தொற்றுகளை சரி செய்து உடலை பாதுகாக்கிறது.
2. பசியை அதிகமாக தூண்டி செரிமான மண்டலத்தை சீராக வேலை செய்ய வைக்கிறது.
3. ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைத்து, இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
4. குறிப்பாக பிரம்ம கமலம் மலர் சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி போன்றவற்றை உடனடியாக குணப்படுத்துகிறது.
5. சிறுநீர் பாதை தொற்று, சிறுநீரகத்தில் கல், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்று, பாலியல் நோய்கள் போன்றவற்றை முற்றிலுமாக குணப்படுத்துவதில் பிரம்ம கமலம் மலர் முக்கிய பங்கு வகிக்கிறது.
6. பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றினால் ஏற்படும் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
7. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண்கள், காயங்கள், வெட்டு காயங்கள் போன்றவற்றை உடனடியாக குணப்படுத்துகிறது.
8. பிரம்ம கமலம் மலரை உபயோகப்படுத்தி கசாயம் செய்து காய்ச்சலின் போது குடித்து வந்தால் நல்ல தீர்வாக இருக்கும் என்று ஒரு ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
9. பிரம்ம கமலம் மலரில் அகொசெடின் என்ற பிளோவோன் உள்ளதால் நரம்பு செல்களில் தூண்டுதல்களை ஏற்படுத்தி மூளையில் ஏற்படும் வலிப்பு போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.
10. ஒரு சில பெண்களுக்கு மாதவிடாயின் போது அதிகப்படியான வலி, அதிகப்படியான இரத்தப்போக்கு, அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இப்படிப்பட்ட பெண்கள் பிரம்ம கமலம் மலரை உபயோகப்படுத்துவதன் மூலம் இப்பிரச்சனையை சரி செய்யலாம்.