பெண்களே..!! மகளிர் உரிமைத்தொகையை வைத்து அதிக பணம் சம்பாதிக்கலாம்..!! தமிழ்மகள் திட்டம் பற்றி தெரியுமா..?
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்கும் துறை என்றால் அது கூட்டுறவுத் துறை தான். தமிழ்நாட்டில் 2.30 கோடி குடும்பங்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்களை கூட்டுறவுத்துறை மூலம் வழங்கி வருகிறோம். இதற்கு 35 ஆயிரம் நியாய விலைக் கடைகள் தான் காரணம்.
கூட்டுறவுத் துறையின் இந்த நெட்வொர்க் தான், தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்கள் மிகப்பெரிய வெற்றி அடைவதற்கு காரணம். கொரோனா ஊரடங்கு காலம், புயல், மழை, வெள்ளம் என பேரிடர் நேரங்களில் பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்க ரேஷன் கடைகள் பெரிதும் உதவின. ஒன்றிய அரசு 1965ஆம் ஆண்டு இந்திய உணவுக் கழகத்தை தொடங்கியது. இதன் மூலம் இந்தியா முழுவதும் விவசாயிகளிடம் இருந்து நெல், கோதுமை முதலான பொருள்களை கொள்முதல் செய்தது.
ஒரு கட்டத்தில், தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டு வந்த அரிசியின் அளவு குறைந்தது. மண்ணெண்ணெய் அளவும் குறைந்தது. அந்த சமயத்தில் தான், கலைஞர் அவர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் என்ற நிறுவனத்தை 1972இல் உருவாக்கினார். தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அரிசி ஆலைகளும், கிடங்குகளும் அமைக்கப்பட்டன. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு நியாய விலைக் கடைகள் மூலம் தான் உணவு தானிய பொருட்கள் அனுப்பப்படுகின்றன. மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் எனும் மகத்தான திட்டத்தை முதலமைச்சர் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். 1 கோடியே 16 லட்சம் மகளிர் மாதந்தோறும் ரூ.1,000 பெறுகின்ற இந்த திட்டத்தில், கூட்டுறவுத் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். அதுமட்டுமின்றி, மகளிர் உரிமைத்தொகையை Recurring Deposit ஆக செலுத்தி, அதன் மூலம் மகளிர் வட்டியைப் பெற்று குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பெரிய அளவிலான தொகையாக பெறுவதற்கான ‘தமிழ்மகள்’ எனும் திட்டத்தையும் கூட்டுறவுத்துறை செயல்படுத்தி வருகிறது” என்றார்.