பெண்களே..!! சுயதொழில் தொடங்க போறீங்களா..? தமிழ்நாடு அரசின் இந்த திட்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க..!!
தமிழ்நாடு அரசு, பொதுமக்களின் நலன் கருதி ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொழில் முனைவோர்கள், சுய தொழில் தொடங்க இருப்பவர்கள், கர்ப்பிணிகள், பெண்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் உதவித்தொகை, வட்டியில்லா கடன், குறைந்த வட்டியுடன் கடன், மானியம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் உதவி செய்து வருகிறது.
இதில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் ஏராளமான குடும்பத் தலைவிகள் பயனடைந்து வருகின்றனர். அதேபோல், பள்ளி மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. சமீபத்தில் கூட மாணவர்களுக்கென தமிழ்ப் புதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் மாணவர்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தான், பெண்களுக்கு ரூ.50,000 வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ரூ.1 கோடி ஒதுக்கீட்டில் 200 பெண்களுக்கு சுயத்தொழில் செய்ய ரூ.50,000 வழங்கப்படுகிறது. கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்டோருக்கு இந்த பணம் வழங்கப்பட இருக்கிறது.
வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள 25 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட பதிவு செய்த உறுப்பினர்களுக்கு சுயத்தொழில் செய்ய ரூ.50,000 வழங்கப்படும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Read More : குரூப் 2 தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு எப்போது..? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!