For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெண்களே நோட் பண்ணிக்கோங்க..!! மாதவிடாய் வலி உடனே பறந்துபோக இதை சாப்பிடுங்க..!!

When minerals are lost with the blood during menstruation, fatigue occurs. Eating chocolate at this time will give the body the energy it needs.
05:30 AM Oct 23, 2024 IST | Chella
பெண்களே நோட் பண்ணிக்கோங்க     மாதவிடாய் வலி உடனே பறந்துபோக இதை சாப்பிடுங்க
Advertisement

பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு ஏற்ற இறக்கமாக இருப்பதால் மன அழுத்தம், கோபம், எரிச்சல், சோகம் போன்ற உணர்வுகள் உண்டாகும். அந்த சமயங்களில் ‘கார்டிசோல்’ எனும் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும். மாதவிடாய் நாட்கள் என்பது பல பெண்களுக்கு மிகவும் நெருக்கடியான காலகட்டமாகும். இந்த சமயங்களில், இடுப்பு வலி, கால் குடைச்சல், வயிற்று வலி மற்றும் மனநிலையில் மாற்றம் போன்ற பிரச்சினைகளை பெரும்பாலானோர் சந்திக்கிறார்கள்.

Advertisement

மாதவிடாயின் போது வயிற்று வலி மற்றும் உடல் வலி அதிகமாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் அசதியும் சோர்வும் அதிகமாக இருக்கும். இந்த சமயங்களில் பெண்கள் ஓய்வு எடுப்பது நல்லது. மேலும் கார்டிசோல்' எனும் ஹார்மோன் அதிக அளவு சரப்பதால் உடல் 'செரோடோனின்' என்ற மகிழ்ச்சியை உண்டாக்கும் ஹார்மோனை வெளியிட சிரமப்படும் இதனால் அந்த சமயங்களில் பெண்களுக்கு ஒரு எரிச்சல் உண்டாகும்.

கார்போஹைட்ரேட், சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த ஏதேனும் உணவுப் பொருளை சாப்பிட்டால் செரோடோனின் ஹார்மோன் எளிதாகச் சுரக்கும். சாக்லெட்டில் இந்தப் பொருட்கள் அதிகமாக உள்ளன. இதனால் பெண்கள் இந்த சமயங்களில் சாக்லெட் சாப்பிடலாம். மாதவிடாய் காலத்தில் இடுப்பு, வயிறு மற்றும் தொடைகள் வலிக்கும்போது சாக்லெட் சாப்பிடுவது நல்லது என்று கூறுகின்றனர்.

மேலும், அடர்ந்த கருப்பு நிறத்தில், சற்று கசப்பு சுவையுடன் இருக்கும் டார்க் சாக்லெட் சாப்பிடுவது சிறந்தது. இதில் மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. 85 சதவீதத்திற்கு அதிகமாக 'கோகோ' கலக்கப்பட்ட டார்க் சாக்லெட்டை தேர்வு செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. மாதவிடாய் சமயத்தில் தினமும் 40 முதல் 120 கிராம் சாக்லெட் சாப்பிடுவது வலியைக் குறைக்க உதவும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. டார்க் சாக்லெட்டில் வைட்டமின் ஏ, பி1, சி, டி மற்றும் ஈ உள்ளது.

கூடுதலாக, இதில் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, சிறிதளவு ஒமேகா 3, 6 மற்றும் அதிக தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி குறையும். மேலும் கோகோ நிறைந்த டார்க் சாக்லெட் மெக்னீசியத்தின் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது இயற்கையான வலி நிவாரணியாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் உடலில் பதற்றம் ஏற்படும்போது, மெக்னீசியம் கருப்பையின் தசைகளை அமைதிப்படுத்தும். உடலில் உள்ள இரும்புச் சத்து அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது.

மாதவிடாய் காலத்தில் ரத்தத்துடன் தாதுக்கள் இழக்கப்படும்போது, சோர்வு ஏற்படும். இந்த நேரத்தில் சாக்லெட் சாப்பிடுவது உடலுக்கு, தேவையான ஆற்றலைத் தரும். மேலும் பெண்களுக்கு சாக்லேட் பிடித்த ஒரு விஷயம் என்பதால் அவர்களுக்கு மகிழ்ச்சியையும் கொடுக்கும். மேலும் முந்திரி, திராட்சை கலந்த நட்ஸ் சாக்லெட், பெர்ரீஸ் வகை சாக்லெட், உப்பு கலந்த சாக்லெட் போன்றவற்றை மாதவிடாய் காலத்தில் சாப்பிடுவது வலியை குறைக்க உதவும்.

Read More : ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! தீபாவளி போனஸ் அறிவிப்பு..!! எவ்வளவு கிடைக்கும் தெரியுமா..?

Tags :
Advertisement