For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெண்களே..!! செம குட் நியூஸ்..!! மகளிர் உரிமைத்தொகை மேலும் விரிவாக்கம்..? எப்போது தெரியுமா..?

Government officials have said that the Women's Rights Scheme will be expanded again next year.
03:57 PM Jul 25, 2024 IST | Chella
பெண்களே     செம குட் நியூஸ்     மகளிர் உரிமைத்தொகை மேலும் விரிவாக்கம்    எப்போது தெரியுமா
Advertisement

தமிழ்நாடு முழுக்க புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்க இருக்கிறது. புதிய ரேஷன் கார்டுகள் அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதில் குடும்ப தலைவி ஆகும் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement

மக்களவைத் தேர்தல் காரணமாக புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிந்த நிலையில், தமிழ்நாடு முழுக்க புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்க உள்ளது. புதிய ரேஷன் கார்டுகள் அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே, மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இம்மாதம் முதல் மேலும் 1.48 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த திட்டம் மேலும் விரிவாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பு அதிகாரிகள் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். இனி அடுத்த வருடம் மீண்டும் இந்த திட்டம் விரிவாக்கப்படும். அப்போது புதிதாக திருமணம் ஆனவர்கள், அரசுப் பணியில் இருந்து காலமான ஆண்களின் மனைவிகள் வரும் வருடங்களில் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு வருடமும் புதிய பயனாளிகள் இணைக்கப்படுவார்கள் என்று அரசு தரப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More : நீங்களும் பிரதமரின் இலவச வீடு திட்டத்தில் பயன்பெற வேண்டுமா..? என்ன தகுதி..? என்ன ஆவணங்கள் தேவை..?

Tags :
Advertisement