பெண்களே..!! இனி நீங்களும் நிலம் வாங்கலாம்..!! ரூ.5 லட்சம் மானியம்..!! தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்..!!
தமிழ்நாடு அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பயனுள்ள திட்டங்கள் நடைமுறை இருந்து வருகிறது. இந்நிலையில் தான், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் எளிதாக நிலம் வாங்கும் திட்டமும் அறிமுகமாகியுள்ளது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பெண்களுக்கான புதிய திட்டங்கள் குறித்து அறிவித்தார்.
அப்போது, "ரூ. 20 கோடி ஒதுக்கீட்டில் நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் செயல்படுத்தப்படும்" என்று தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் மொத்தச் செலவில் அதிகபட்சம் 50% அல்லது ரூ. 5 லட்சம் மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன் பெற விரும்புவோரின் வயது 18-55 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.
பெண்கள் விவசாயத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் விதமாக இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். விண்ணப்பதாரர் மற்றும் உறவினர்கள் பெயரில் வாங்க முடிவு செய்திருக்கும் நிலமும் 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சையாக இருக்கலாம்.
நிலத்தின் விலை சந்தையைப் பொறுத்து மதிப்பீடு செய்யப்படும் என்றும் முத்திரைத் தாள் மற்றும் பதிவு கட்டணம் முழுமையாகக் கிடையாது என்றும் வாங்கிய நிலத்தை 10 ஆண்டுகளுக்குள் விற்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : கணவருடன் கருத்து வேறுபாடு..!! விவகாரத்து முடிவா..? முற்றுப்புள்ளி வைத்த நடிகை ரம்பா..!!