பெண்களே..!! உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் நகைகள்..!! இவ்வளவு நன்மைகளா..?
நகைகள் அணிவது, நம் பாரம்பரியத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது. நகைகள் அணிவதன் மூலம், நம் உடலில் உள்ள முக்கிய வர்ம புள்ளிகளை தூண்டி, ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது. வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றதாக சொல்லப்படுகிறது.
மெட்டி : மெட்டி அணிவதன் மூலம் கர்ப்பப்பையை பலப்படுத்தும். செக்ஸுவல் ஹார்மோன்களைத் தூண்டுவிடும். 'பில்லாலி' என்பது குழந்தை பிறந்தவுடன் 3-வது விரலில் அணிவதாகும். இதனால் சில புள்ளிகள் தூண்டப்பட்டு பால் சுரப்பு அதிகரிக்கும்.
கொலுசு : கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், வயிறு போன்ற முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அணிகலன் கொலுசு. கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.
நெற்றிச்சுட்டி : தலைவலி, சைனஸ் பிரச்சனை சரி செய்ய உதவுகிறது.
வளையல் : வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி அதிகரிக்கிறது. மேலும், ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யப்படுகிறது. இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.
தோடு : மூளையின் செயல் திறனை அதிகரிக்க செய்யும். கண்பார்வையின் திறன் கூடும்.
மோதிரம் : பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது. ப்ரேசிலட், வாட்ச், காப்பு அணிவதும் பாலுறுப்பின் புள்ளிகளை தூண்டிவிடும்.
மூக்குத்தி : மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அந்தப் புள்ளிகள் தூண்டப்படும்போது அது சம்பந்தமான நோய்கள் சரியாகும். மூக்குத்தி அணியும் பெண்களுக்கு மாதவிடாய் சிக்கல் சரியாகி வருவதை உணரலாம்.
செயின், நெக்லஸ் : கழுத்தில் செயின் அணியும்போது, உடலுக்கும், தலைக்கும் இடையேயுள்ள சக்தி ஓட்டம் சீராகும். பெண்கள், நகைகளை அணிந்து கொள்வதால், அவர்களுக்கு அதிக, 'பாசிட்டிவ் எனர்ஜி' கிடைக்கும்.
ஒட்டியாணம் : இடுப்புப் பகுதி நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும். வயிற்றுப் பகுதிகள் வலுவடையும்.
Read More : அதிர்ச்சி..!! கழிவுநீர் கலந்த குடிநீர்..!! 3 பேர் பரிதாப மரணம்..!! எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்..!!