முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெண்களே உஷார்..!! முகத்தில் வளரும் முடியை ஷேவ் செய்வதால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா..?

Many people follow the method of shaving with razor blades to remove facial hair.
07:33 PM Nov 12, 2024 IST | Chella
Advertisement

இன்றைய நிலையில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருமே சருமத்தில் உள்ள ரோமங்களை நீக்குவதற்கு ரேசர் பிளேடுகளை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, முகத்தில் உள்ள முடியை நீக்குவதற்கு பலரும் ரேசர் பிளேடுகளைக் கொண்டு ஷேவ் செய்யும் முறையையே பின்பற்றி வருகின்றனர். ஆனால், ஷேவ் செய்வது நல்லது தான் என்று ஒரு சாராரும், ஷேவ் செய்யக் கூடாது என்று மற்றொரு சாராரும் கூறி வருகின்றனர். உண்மையில் ஷேவ் செய்யலாமா செய்யக்கூடாதா, அதனால் உண்டாகும் நன்மை தீமைகளை என்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

இறந்த செல்களை வெளியேற்ற உதவும் : ரேசர் பிளேடுகளை கொண்டு ஷேவ் செய்யும் போது, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்தை பளிச்சென்று வைக்க உதவுகிறது. மேலும் சருமத்தில் உள்ள நுண் துளைகளில் தேங்கி இருக்கும் எண்ணெய் பசைகளையும் அழுக்குகளையும் வெளியேற்றுகிறது.

வழவழப்பான சருமம் : ஷேவ் செய்வதால் முகத்தில் உள்ள முடிகள் நீக்கப்படுவதால் அவை இயல்பாகவே சருமத்தை வழவழப்பாக்குகின்றன. மேலும், சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தும் போது அவை சருமத்தின் நுண் துளைகளால் நன்றாக கிரகிக்கப்பட்டு முகத்தை அழகாக வைக்க உதவுகிறது.

முடியை முழுவதுமாக நீக்குகிறது : வேக்சிங் போன்ற மற்ற முறைகளின் மூலம் முடிகளை நீக்கும் போது, சில குறிப்பிட்ட பகுதிகளில் முடியை முழுவதும் நீக்காமல் மிகச்சிறிய அளவிலான முடிகளை சருமத்தில் காண முடியும். ஆனால், ஷேவிங் செய்யும்போது அவை முகத்தில் உள்ள முடிகளை முற்றிலுமாக நீக்குகிறது.

ரேசர்களை கொண்டு ஷேவ் செய்வதால் ஏற்படும் பிரச்சினைகள் : 

மிகவும் சென்சிட்டிவான சருமத்தை கொண்டவர்களுக்கு ஷேவ் செய்ததும் அந்த இடத்தில் எரிச்சல் உண்டாக வாய்ப்பு உண்டு. சரியான பிளேடு பயன்படுத்தாமல் அதிக அழுத்தம் கொடுத்து ஷேவ் செய்வது, உட்புறமாக வளர்ந்த முடி ஆகியவை சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும் காரணிகள் ஆகும். எனவே, ஷேவ் செய்யும்போது மிகவும் கவனமுடன் இருப்பது அவசியம்.

தற்காலிகமான தீர்வு : ஷேவ் செய்வது என்பது முடியை நிரந்தரமாக நீக்க உதவாது. ஷேவ் செய்து சில நாட்களிலேயே முடி மீண்டும் வளர துவங்கிவிடும். முடியை நிரந்தரமாக நீக்குவதற்கு நீங்கள் விரும்பினால் லேசர் முறையில் முடியை நீக்குதல் அல்லது வேக்சிங் போன்ற முறைகளை பின்பற்றலாம்.

முடி தடிமனாக வளரும் என்ற கட்டுக்கதை : சிலர் அடிக்கடி ஷேவ் செய்யும் பட்சத்தில் மீண்டும் வளரும் முடியானது மிகவும் தடிமனாகவும் அடர்த்தியாகவும் வளரும் என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், உண்மையிலேயே ஷேவ் செய்யும் பட்சத்தில் அவை முடியின் நிறம், வளரும் வேகம் மற்றும் அதன் தடிமன் ஆகியவற்றில் எந்தவித மாறுதல்களையும் ஏற்படுத்துவதில்லை.

துள்ளியத்தன்மை : முகத்தில் புருவம் போன்ற இடங்களில் ஷேவ் செய்யும் போது மிகவும் கவனமுடனும் துல்லிய தன்மையுடனும் ஷேவ் செய்ய வேண்டும். அனுபவமற்ற சிலர் ஷேவ் செய்யும் போது சரிவர செய்ய தெரியாததால் தம்மை தாமே காயப்படுத்திக் கொள்கின்ற அபாயம் உள்ளது.

ஷேவ் செய்வது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமாகும் மேலே கூறிய விஷயங்களை கருத்தில் கொண்டு உங்களது தேவைகளுக்கு ஏற்ப ஷேவிங் முறையில் முடியை நீக்குவதா அல்லது வேறு ஏதேனும் முறைகளை பின்பற்றி முடிகளை நீக்குவதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். உங்கள் சரும பராமரிப்பை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள ஒரு தோல் மருத்துவரை அணுகி கலந்தாலோசிப்பது நல்லது.

Read More : மது ஊற்றிக் கொடுத்து மாணவிகளின் வாழ்க்கையில் விளையாடிய பிடி மாஸ்டர்..!! விடுதி அறையில் நடந்த விபரீதம்..!!

Tags :
ஆண்கள்பெண்கள்ரேசர் பிளேடுகள்ஷேவ்
Advertisement
Next Article