’குதிச்சிருடா கைப்புள்ள’..!! பைக்கை தூக்க வந்த பைனான்ஸ் ஊழியர்..!! விரட்டி அடித்த உரிமையாளர்..!! குளத்தில் குதித்த பரிதாபம்..!!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தில் 25 வயது இளைஞர் வேலை பார்த்து வருகிறார். இந்த நிதி நிறுவனத்தில் அருமனை அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்த ஒருவர் கடன் பெற்று புதிய இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். இதற்கு அவர் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை கட்ட வேண்டியிருந்தது. ஆனால், அவர் சரியாக தவணைத் தொகையை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், நிதி நிறுவனத்தில் வேலை செய்யும் 25 வயது இளைஞர் சிலருடன் சென்று தவணைத் தொகை கட்டாதவரின் இருசக்கர வாகனத்தை எடுத்து வருவதற்காக அந்த பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, வாகனத்தை எடுக்கப்பதற்கு கடன் பெற்றவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், நிறுவனத்திரை அவர் அவேசத்துடன் விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கிருந்து தப்பிப்பதற்காக அந்த 25 வயது இளைஞர் ஓடியுள்ளார்.
அருமனை சந்திப்பை அடுத்துள்ள நெடுங்குளம் சந்திப்பு வழியாக ஓடியிருக்கிறார். அங்கு ஓடிச்சென்று அந்த பகுதியில் உள்ள குளத்தில் குதித்திருக்கிறார். அந்த குளத்தில் ஆகாய தாமரை செடிகள் அதிகம் இருந்தது. இதனால் அவரால் அங்கிருந்து வெளியே வர முடியாமல் கடன் நிறுவன ஊழியர் பரிதவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் குளத்தில் ஆகாய தாமரை செடிகளுக்கு இடையே சிக்கி தவித்த இளைஞரை மீட்டனர். பின்னர் அவரை அருமனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து அருமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தவணை தொகை கேட்டு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியரை துரத்தியதால் அவர் குளத்தில் குதித்து பரிதவித்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.