முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆசையோடு வந்த காதலனை குடும்பத்தோடு சேர்ந்து கொலை செய்த கிரீஷ்மா..!! குற்றவாளி என தீர்ப்பு..!! தண்டனை இன்று அறிவிப்பு..!!

The Neyyattinkarai Additional Sessions Court ruled that Krishma was the culprit in this case.
07:55 AM Jan 18, 2025 IST | Chella
Advertisement

கேரள மாநிலம் மூறியன்கரை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஷாரோன் ராஜ் என்பவரும் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள கல்லூரியில் படித்து வந்த கிரீஷ்மா என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த 2022ஆம் ஆண்டு கிரீஷ்மா வீட்டில் மாப்பிளை பார்த்துள்ளனர். அதற்கு கிரீஷ்மாவும் சம்மதம் தெரிவித்த நிலையில், ஷாரோன் ராஜ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Advertisement

எனவே, ஷாரோன் ராஜை கொலை செய்தால் தான், கல்யாணம் நடக்கும் என்ற நோக்கத்தோடு கடந்த 2022 அக்டோபர் 14ஆம் தேதி ஷாரோன் ராஜை சமாதானம் செய்ய முடிவு செய்வதுபோல அவரை வீட்டிற்கு அழைத்துள்ளார். தன்னுடைய காதலி அழைத்தவுடன் நம்பி வீட்டிற்கு சென்ற ஷாரோன் ராஜுக்கு குளிர்பானத்தில் கிரீஷ்மா விஷம் கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்த ஷரோன் ராஜ், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 25ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, பரிசோதனையில் அவர் விஷயம் அருந்தியது தெரியவந்தது.

இதனையடுத்து, இந்த வழக்குத் தொடர்பாக கிரீஷ்மாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அத்துடன், இந்த வழக்கில் கிரீஷ்மாவின் தாய் மற்றும் அவருடைய தாய் மாமாவுக்கும் இந்த கொலையில், தொடர்பு இருப்பதாக அவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று (ஜனவரி 17) இந்த வழக்கில் நெய்யாட்டின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் குற்றவாளி கிரீஷ்மா தான் என தீர்ப்பளித்தது.

அதன்படி, கிரீஷ்மாவும், அவரின் தாய்மாமனும் இந்த வழக்கில் குற்றவாளிகள் எனவும், கிரீஷ்மாவின் தாயார் சிந்துவுக்கு எதிராக சரியான ஆதாரங்கள் இல்லை என்பதால் அவர் விடுவிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேசமயம், குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் பற்றிய விவரங்கள் இன்று (ஜனவரி 18) அறிவிக்கப்படும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

Read More : போலீஸ் கண்முன்னே கழுத்தறுத்துக் கொலை..!! பஞ்சாயத்து பேச அழைத்துச் சென்றபோது நேர்ந்த பரிதாபம்..!! ஸ்டேஷன் முன்பு வெடித்த போராட்டம்..!!

Tags :
Keralaகாதலன்காதலிகுற்றவாளிதண்டனை
Advertisement
Next Article